IND vs NZ Test:நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்; பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? கே.எல்.ராகுல் வெயிட்டிங்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்டில் கே.எல்.ராகுலுக்கு இடம் கிடைக்குமா என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது. அதாவது, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கே.எல்.ராகுலுக்கு இடம் கிடைக்குமா?
தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற முனைப்பில் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி களம் இறங்க இருக்கிறது. அதே போல், ஹாட்ரிக் தோல்வியை தடுக்கும் முனைபில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி களம் காண்கிறது. இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
முன்னதாக, இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, ஜடேஜா, கில் போன்ற வீரர்கள் தொடர்ந்து தடுமாறி வருகிறார்கள். முதல் டெஸ்டில் 150 ரன்கள் விளாசிய சர்பராஸ்கான் இரண்டாவது டெஸ்டில் தடுமாறினார். பந்துவீச்சில் அஸ்வின் ஜடேஜா ஆகியோரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பும்ராவும் விக்கெட் எடுக்க தடுமாறினார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மாற்றம் இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது டெஸ்டில் அதிரடியாக நீக்கப்பட்ட கே எல் ராகுல் மற்றும் வாய்ப்பு கிடைக்காத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன துருவ் ஜூரல் ஆகியோர் மூன்றாவது டெஸ்டில் விளையாடுவார்கள் என செய்திகள் வெளியானது. ஆனால் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் கம்பீர் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் விளையாடிய வீரர்களை மூன்றாவது டெஸ்டிலும் விளையாடுவார்கள் என்ற முடிவில் இருக்கிறார்கள்.குறிப்பாக பந்துவீச்சில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிகிறது.
ஆகாஷ் தீப்க்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இரண்டாவது டெஸ்டில் சர்ஃபராஸ் தடுமாறினாலும், மும்பை மைதானத்தில் மிகப் பெரிய ரெக்கார்டுகளை வைத்திருப்பதால், 3வது டெஸ்டில் அவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும். இதனால் 99% இந்திய அணி எந்த மாற்றமும் செய்யாமல் விளையாடும் என தெரிகிறது. ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.