IND vs ENG: ஜனவரி 25-ம் தேதி முதல் 11 வரை! இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இந்திய அணியில் யாருக்கு இடம்.?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25-ம் தேதி முதல் தொடங்குகிறது.
ஆப்கானிஸ்தானுடனான டி20 தொடருக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி பலம் கொண்ட இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2 முதல் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15 முதல் 19 வரை நடைபெறுகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் பிப்ரவரி 23 முதல் 27 வரையிலும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மஷாலாவில் மார்ச் 7 முதல் 11 வரையிலும் நடைபெறும்.
இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ், சோயப் பஷீர், பென் ஃபாக்ஸ் மற்றும் ஒல்லி போப் என ஒன்பது பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ரெஹான் அகமது என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களாகவும், வேகப்பந்து வீச்சு பிரிவில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஒல்லி ராபின்சன், மார்க் வுட் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபாக்ஸ் (விக்கெட் கீப்பர்) ), டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட் மற்றும் மார்க் வூட்.
இந்திய அணி எப்படி இருக்கும்..?
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தகவல் பரவி வருகிறது, ஷமி இன்னும் பந்து வீசத் தொடங்கவில்லை என்றும், அவர் என்சிஏவுக்குச் சென்று தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிகிறது. அதேபோல், இந்திய அணியின் முக்கிய வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் திரும்புவார்கள்.
ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்த புஜாரா, மற்றும் ரஹானே இந்திய அணிக்கு திரும்புவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
IND vs ENG டெஸ்ட் தொடருக்கான கணிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்/ ஷர்துல் தாக்கூர்
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முழுமையான அட்டவணை:
- முதல் டெஸ்ட்: இந்தியா vs இங்கிலாந்து, ஜனவரி 25-29, ஹைதராபாத் (ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம்)
- இரண்டாவது டெஸ்ட்: இந்தியா vs இங்கிலாந்து, பிப்ரவரி 2-6, விசாகப்பட்டினம் (டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர் கிரிக்கெட் ஸ்டேடியம்)
- மூன்றாவது டெஸ்ட்: இந்தியா vs இங்கிலாந்து, பிப்ரவரி 15- பிப்ரவரி 19, ராஜ்கோட் (சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்)
- நான்காவது டெஸ்ட்: இந்தியா vs இங்கிலாந்து, பிப்ரவரி 23-27, ராஞ்சி (JSCA சர்வதேச ஸ்டேடியம்)
- ஐந்தாவது டெஸ்ட்: இந்தியா vs இங்கிலாந்து, மார்ச் 7-11, தர்மஷாலா (ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம்)