(Source: ECI/ABP News/ABP Majha)
India Squad Announced: கே.எல்.ராகுலுக்கு தொடரும் வாய்ப்பு.. ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் , ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இதுதான்..!
ஆஸ்திரேலியா அணியுடனான மீதமுள்ள 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியுடனான மீதமுள்ள 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டி இன்று முடிவுக்கு வந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அதன்படி அந்த அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களும் எடுத்தது. ஒரு ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 115 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை 26.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக ரோகித் சர்மா தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பிய கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், சட்டீஸ்கர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.