India Records in Asia Cup: ஆசியக்கோப்பை வரலாற்றில் அழிக்கமுடியாத இந்தியாவின் ஆதிக்கம்… 5 மிகப்பெரிய சாதனைகள்!
அனைத்து ஆசியக் கோப்பை தொடர்களிலும் இந்திய அணியின் ஆதிக்கம் பெரிதாக இருந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக இலங்கை அணி இருந்தாலும் இந்தியா செய்துள்ள சாதனைகள் மிகப்பெரியது.
ஆசிய கோப்பை 2023 இன்று தொடங்கியுள்ள நிலையில், குரூப் ஏ வில், தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகள் இடையே நடைபெறுகிறது. இதே குழுவில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகியவை குரூப் பியில் இடம் பெற்றுள்ளன. 1984 இல் தொடங்கிய ஆசிய கோப்பை போட்டிகளின் 16வது பதிப்பு இதுவாகும். இதுவரை இதில் இரண்டு பதிப்புகள் மட்டும் 20 ஓவர் வடிவத்தில் (2016 மற்றும் 2022) விளையாடப்பட்டுள்ளன. மீதமுள்ள போட்டிகள் 50 ஓவர் வடிவத்தில் விளையாடப்பட்டுள்ளன. நடந்துள்ளது அத்தனை ஆசியக் கோப்பை தொடர்களிலும் இந்திய அணியின் ஆதிக்கம் பெரிதாக இருந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக இலங்கை அணி இருந்தாலும் இந்தியா செய்துள்ள சாதனைகள் மிகப்பெரியது. அந்த சாதனைகளில் மிக முக்கியமான 5 சாதனைகளை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிக தனிப்பட்ட சதங்கள்
ஆசிய கோப்பையில் இதுவரை இந்தியாவை சேர்ந்த 11 வீரர்கள் சதம் அடித்துள்ளனர். குறிப்பாக விராட் கோலி மூன்று சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதிகபட்ச ஸ்கோர்
ஆசியக் கோப்பையில் இந்தியா வைத்திருக்கும் மற்றொரு பெரிய சாதனை T20I வடிவத்தில் அதிகபட்ச அணி ஸ்கோர்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 212/2 ரன்கள் எடுத்தது. ஒருநாள் போட்டிகளில் 2010ல் வங்கதேசத்துக்கு எதிராக 385/7 ரன் குவித்து, அதிக ஸ்கோரை குவித்த சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது.
அதிகபட்ச ரன்-சேஸ்
2012ல், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 330 ரன்களை இந்தியா 13 பந்துகள் மிச்சம் வைத்து வெற்றிகரமாக சேஸ் செய்தது. கோலி அதிரடியாக ஆடி 183 ரன்களை குவித்தது இன்றும் மறக்க முடியாத இன்னிங்ஸ் ஆக உள்ளது.
அதிக வெற்றிகள்
ஒட்டுமொத்த ஆசியாக்கோப்பை வரலாற்றில் இந்தியா 59 போட்டிகளில் ஆடி, 39 போட்டிகளில் வென்றுள்ளது. அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. போட்டியின் டி20 வடிவத்திலும் இந்தியா மிகவும் வெற்றிகரமான அணியாகும். இந்திய அணி இதுவரை 10 டி20 ஆட்டங்களில் விளையாடி, அதில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதிக கோப்பைகள்
ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியாதான் அதிக வெற்றி பெற்ற அணி. அவர்கள் இதுவரை ஏழு முறை போட்டியை வென்றுள்ளனர் - ஆறு ODI பட்டங்கள் மற்றும் ஒரு T20I பட்டம் அதில் அடங்கும். இரண்டாவது இடத்தில் இலங்கை அணி 6 பட்டங்களுடன் உள்ளது. இம்முறை வென்றால் இந்திய அணியை சமன் செய்யும்.