மேலும் அறிய

India Cricket Team Coaches: 1971 முதல் இந்திய கிரிக்கெட் அணிக்கு இத்தனை பயிற்சியாளர்களா..? அசரவைக்கும் முழு லிஸ்ட் இதோ!

கடந்த 1971ம் ஆண்டு முதல் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். 

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. பிசிசிஐ சார்பில் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்க முடிவு எடுத்தாலும், டிராவிட் தனிப்பட்ட காரணங்களால் தலைமை பயிற்சியாளராக இருக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. 

இதையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங்கை கொண்டு வர பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது. 

இந்தநிலையில் கடந்த 1971ம் ஆண்டு முதல் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். 

வரிசை எண் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கால அளவு சொந்த நாடு
1 கேகி தாராபூர் 1971 இந்தியா
2 ஹேமு அதிகாரி 1971 – 1974 இந்தியா
3 குலாப்ராய் ராம்சந்த் 1975 இந்தியா
4 தத்தா கெய்க்வாட் 1978 இந்தியா
5 சலீம் துரானி 1980 - 1981 இந்தியா
6 அசோக் மங்காட் 1982 இந்தியா
7 பி.ஆர். மான் சிங் 1983 – 1987 இந்தியா
8 சந்து போர்டே 1988 - 1989 & 2007 இந்தியா
9 பிஷன் சிங் பேடி 1990 - 1991 இந்தியா
10 அப்பாஸ் அலி பெய்க் 1991 – 1992 இந்தியா
11 அஜித் வடேகர் 1992 – 1996 இந்தியா
12 சந்தீப் பாட்டீல் 1996 இந்தியா
13 மதன் லால் 1996 – 1997 இந்தியா
14 அன்சுமான் கெய்க்வாட் 1997 – 1999 இந்தியா
15 கபில் தேவ் 1999- 2000 இந்தியா
16 ஜான் ரைட் 2000 - 2005 நியூசிலாந்து
17 கிரெக் சேப்பல் 2005 - 2007 ஆஸ்திரேலியா
18 ரவி சாஸ்திரி 2007, 2015, 2017 - 2021 இந்தியா
19 லால்சந்த் ராஜ்புத் 2007 – 2008 இந்தியா
20 கேரி கிர்ஸ்டன் 2008 - 2011 தென்னாப்பிரிக்கா
21 டங்கன் பிளெட்சர் 2011 - 2015 ஜிம்பாப்வே
22 சஞ்சய் பங்கர் (இடைக்காலம்) 2016 இந்தியா
23 அனில் கும்ப்ளே 2016 - 2017 இந்தியா
24 ராகுல் டிராவிட் 2021- தற்போது வரை இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் முதல் தலைமை பயிற்சியாளர்: 

இந்திய கிரிக்கெட் அணியின் முதல் பயிற்சியாளர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் கேகி தாராபூர். இவர் கர்நாடக கிரிக்கெட் வீரராக இருந்து பயிற்சியாளராக உயர்வு பெற்றார். 

பி.ஆர்.மான் சிங்: 

பி.ஆர். மான் சிங்கை பயிற்சியாளர் என்று சொல்வதை விட இந்திய அணி மேலாளர் என்று சொல்வதே சிறந்தது. இவர்தான் இந்திய அணி முதல் முறைய ஐசிசி உலகக் கோப்பை வென்றபோது மேலாளராக இருந்தார். இதையடுத்து, பி.ஆர். மான் சிங் 1983 முதல் 1987 வரை இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக இருந்தார். 

ஜான் ரைட்: இந்திய கிரிக்கெட் அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளர்:

2000 ஆம் ஆண்டில் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜான் ரைட்டைக் கொண்டு வர முடிவு செய்தனர். 2001 கொல்கத்தா டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி, பாகிஸ்தானில் ஒரு வெளிநாட்டு தொடர் வெற்றி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி, 2003 ஐசிசி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி என இவரது பயிற்சியின் கீழ், கங்குலியின் தலைமையில் கீழ் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. 

கேரி கிர்ஸ்டன்:

2008ம் ஆண்டு கேரி கிர்ஸ்டன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதுதான் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலமாக அமைந்தது. இவரது பயிற்சியின் கீழ், இந்திய அணி டெஸ்டில் நம்பர் 1 இடத்தையும், 21 ஆண்டுகள் பிறகு 2011ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்று அசத்தியது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
Embed widget