மேலும் அறிய

IND vs NZ 2nd ODI: மிரட்டல் பவுலிங்.. அசத்தல் பேட்டிங்.. நியூசிலாந்தை ஊதிதள்ளிய இந்தியா..! தொடரை வென்று அசத்தல்..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில்  கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 50 ஓவர்களில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்துடன் 349 ரன்கள் குவித்த போதும் போராடியே வெற்றி பெற்றது. 

2வது போட்டி 

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இந்தியா -நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரை இழக்கக்கூடாது என நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டின.

டாஸ் வென்ற ரோகித்:

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்தனர்.

தடுமாறிய நியூசிலாந்து:

தொடக்க ஆட்டக்காரர்களாக ஆலன் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர். ஆனால், ரன் கணக்கை தொடங்கும் முன்பே, முதல் ஓவரின் 5வது பந்தில் ஆலன் போல்டாகி வெளியேறினார்.  போட்டியின் 6வது ஓவரில் நிகோலஸ் முகமது சிராஜ் வீசிய பந்தில் சுப்மன் கில்லிடன் கேட்ச் ஆகி அவுட்டாகி வெளியேறினார். அவர் 20 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுத்தார்.

அதற்கடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மிட்ஷ்லெல் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தினார்.  இதற்கடுத்து பாண்ட்யா பந்துவீச்சில் காட் & போல்ட் முறையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். aவரை தொடர்ந்து, கேப்டன் லாதம் 17 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், தாகூர் பந்து வீச்சில் அவுட்டானர். இதன் மூலம், 15 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது.

நியூசிலாந்து ஆல்-அவுட்

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரேஸ்வெல், இன்றைய போட்டியில் 22 ரன்கள் எடுத்து இருந்த போது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதலே தடுமாறிய நியூசிலாந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட, சாண்ட்னர் 27 ரன்கள் எடுத்திருந்த போது பாண்ட்யா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

சாண்ட்னர் - பிலிப்ஸ் ஜோடி 7வது விக்கெட்டிற்கு 47 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் பந்துவீச்சை ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடிய பிலிப்ஸ், 36 ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த பெர்கூசன் மற்றும் டிக்னெர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி, 34.3 ஓவர்களில், 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக, ஷமி 3 விக்கெட்டுகளையும், பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்திய அணி அபாரம்:

இதையடுத்து, 109 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் பொறுப்புடன் ஆடினர். ஒருபுறம் இளம் வீரர் சுப்மன் கில் நிதானமாக ஆட, மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி கட்டினார். 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 47 பந்துகளில், ஒருநாள் போட்டிகளில் தனது 48வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடியோ இந்திய அணிக்கான வெற்றி இலக்கை அடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 51 ரன்கள் எடுத்து இருந்தபோது ரோகித் சர்மா ஷிப்லே பந்துவீச்சில், எல்.பி.டபள்யூ. முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். சுப்மன் கில் - ரோகித் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 72 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம்,  வெறும்  20.1 ஓவர்கள் முடிவில் 111 ரன்களை சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது.

தொடர்ச்சியாக 7வது தொடரில் வெற்றி:

கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3- 2 என கைப்பற்றியது. அதைதொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எந்த ஒரு அணியும் ஒருநாள் தொடரை கைப்பற்றவில்லை. அதன்படி, உள்நாட்டில் நடைபெற்ற கடந்த 7 ஒருநாள் போட்டி தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget