IND vs WI: இந்திய அணியின் மைனஸ் இதுதான். அதுவே எங்களுக்கு பலம் - வெ.இண்டீஸ் கேப்டன் போட்ட புதுக்கணக்கு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் நேற்று வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்தனர்.
இந்நிலையில் இந்திய தொடருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரண் ஜமைக்காவிலுள்ள ரெடியோ ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை பல அனுபவ இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை. ஆகவே எங்களுடைய வேலை சற்று எளிதாக முடியும் என்று கருதப்படுகிறது.
எனினும் இந்திய அணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களிடன் அனுபவ வீரர்களுக்கு மாற்று வீரர்களாக களமிறங்க பலர் உள்ளனர். எனவே அவர்களுக்கு நாங்கள் நல்ல போட்டியாக அமைவோம். இந்தத் தொடர் எங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் கொண்ட அணி களமிறங்கியுள்ளது.
குயின்ஸ் பார்கில் மைதானத்தில் இந்தியா:
வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி குயின்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி தற்போது வரை 21 போட்டிகளில் களமிறங்கியுள்ளது. அவற்றில் 11 போட்டிகளில் வெற்றியும், 9ல் தோல்வியும் அடைந்துள்ளனர். ஒரு போட்டி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
ஒருநாள் போட்டி அட்டவணை:
ஜூலை 22- முதல் ஒருநாள் போட்டி
ஜூலை 24-இரண்டாவது ஒருநாள் போட்டி
ஜூலை-27-மூன்றாவது ஒருநாள் போட்டி
ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தத் டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மீண்டும் இணைய உள்ளார். ரிஷப் பண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற்றுள்ளார். விராட் கோலிக்கு மட்டும் இந்தத் தொடர் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்