IND Vs WI, 5th T20: தடுமாற்றத்தில் இருந்து மீண்டு வரும் இந்தியா; குறுக்கே வந்த மழையால் ஆட்டம் நிறுத்தம்..!
IND Vs WI, 5th T20: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் தடை பட்டுள்ளது.
IND Vs WI, 5th T20: தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 5வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே தேவையில்லாத ஷாட்டால் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஆனால் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை கைப்பற்றிய ஆகேல் கில்லின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இது இந்திய அணிக்கு பெரும் சறுக்கலாக அமைந்தது. 17 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்தது.
இந்திய அணியை மெல்ல மெல்ல மீட்ட சூர்யா மற்றும் திலக் வர்மா ஜோடி மிகச் சிறப்பாக ஆடி வந்தது. ஆனால் அதிரடியாக ஆடி வந்த திலக் வர்மா ரோசன் ஷேஸ் பந்தில் தனது விக்கெட்டை அவரிடமே இழ்ந்து வெளியேறினார். இதையடுத்து வந்த சஞ்சு சாம்னும் ஏமாற்ற, கேப்டன் ஹர்திக் பாண்டியா சூர்யகுமாருடன் இணைந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து வந்தாலும், சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். 15.5 ஓவர்கள் முடிந்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.