IND vs WI, Series Schedule: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கான மைதானங்கள் அறிவிப்பு
3 ஒரு நாள் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்திலும், 3 டி20 போட்டிகளும் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும், பிப்ரவரி 16-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் தொடங்க உள்ளது.
BCCI announces a change in venues for the upcoming West Indies’ Tour of India. The West Indies will arrive here for a white-ball series comprising three ODIs and as many T20Is: Board of Control for Cricket in India (BCCI)#IndvsWI pic.twitter.com/4Az7cT9qcp
— ANI (@ANI) January 22, 2022
கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்திலும், 3 டி20 போட்டிகளும் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டிகளுக்கான அட்டவணை
பிப்ரவரி 6 | முதல் ஒரு நாள் போட்டி | அகமதாபாத் |
பிப்ரவரி 9 | இரண்டாவது ஒரு நாள் போட்டி | அகமதாபாத் |
பிப்ரவரி 11 | மூன்றாவது ஒரு நாள் போட்டி | அகமதாபாத் |
பிப்ரவரி 16 | முதல் டி20 போட்டி | கொல்கத்தா |
பிப்ரவரி 18 | இரண்டாவது டி20 போட்டி | கொல்கத்தா |
பிப்ரவரி 20 | மூன்றாவது டி20 போட்டி | கொல்கத்தா |
The decision to limit the series to two venues instead of six as originally announced has been done to mitigate biosecurity risks by cutting down on travel and movement of the teams, match officials, broadcasters, and other stakeholders: BCCI
— ANI (@ANI) January 22, 2022
முன்னதாக, ஆறு மைதானங்களில் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா காரணமாக பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டியுள்ளதால், இரண்டு மைதானங்களில் அனைத்து போட்டிகளையும் நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்