IND vs SL: மீண்டும் இந்தியாவுக்கு விளையாடணுமா? ரஞ்சி தொடர்ல கெத்து காமிங்க..முக்கிய வீரர்களுக்கு செக் வைத்த பிசிசிஐ!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஃபார்மில் இல்லாத இந்திய பேட்ஸ்மேன்கள் சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இலங்கை அணி விரைவில் இந்தியா வர இருக்கிறது.
இலங்கை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இரண்டு டி20 போட்டிக்கொண்ட தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இலங்கை தொடருக்கான டெஸ்ட் அணியில் புஜாரா,ரஹானே, சாஹா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா, மாயங்க் அகர்வால், பிரியங்க் பன்சல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பண்ட், கே.எஸ்.பாரத், அஷ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்
🚨 JUST IN: India have named their new permanent Test captain.
— ICC (@ICC) February 19, 2022
Details 👇https://t.co/lgLdDROGyE
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஃபார்மில் இல்லாத இந்திய பேட்ஸ்மேன்கள் சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மூத்த பேட்ஸ்மேன்களும் சமீப காலங்களில் மோசமான பார்மில் விளையாடி வருகின்றனர். மேலும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டி தோல்விக்கு பிறகு அணியில் அவர்களின் இடம் குறித்து ஏற்கனவே கேள்விகள் எழுப்பப்பட்டன.
சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் ரஞ்சி டிராபியில் விளையாடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ரஹானே மற்றும் புஜாரா குறித்து தேர்வுக் குழு நிறைய முறை விவாதித்தது. நாங்கள் அவர்களை இலங்கைக்கு எதிராக நீக்கப்பட்டதாக கருத வேண்டாம் வேண்டும் என்று தெரிவித்தோம்.ரஞ்சி டிராபி விளையாடி அவர்களின் திறமையை நிரூபித்தால் இந்திய அணியில் அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்