IND vs SL, 2nd T20: அடித்து நொறுக்கிய இலங்கை பேட்டர்கள்... இந்திய அணி வெற்றி பெற 184 ரன்கள் இலக்கு
IND vs SL, 2nd T20: இன்று நடைபெற்று வரும் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், இந்திய அணி தொடர்ச்சியாக 11வது வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது.
ஓப்பனிங் களமிறங்கிய இலங்கை அணி பேட்டர்கள் பவர்ப்ளே முடியும் வரை விக்கெட் இழப்பின்றி ரன்கள் சேர்த்தனர். போட்டியின் 9வது ஓவரில்தான், ஜடேஜா வீசிய பந்தில் முதல் விக்கெட் சரிந்தது. அதனை அடுத்து சாஹல் பந்துவீச்சில் இரண்டாவது விக்கெட் சரிந்தது.
A solid fifty from the Sri Lankan opener 👏#INDvSL | 📝 https://t.co/rpWS0qitjC pic.twitter.com/eqottOxwDc
— ICC (@ICC) February 26, 2022
ஓப்பனர் நிஷாங்காவின் (75) சிறப்பான ஆட்டத்தால், இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டது. அவருடன் கூட்டணி சேர்ந்த ஷனாகா (47*) கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரன் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்திய அணி பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை புனவேஷ்வர் குமார், ஜடேஜா, சாஹல், பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். அதிகபட்சமாக, ஹர்ஷல் பட்டேல் வீசிய 4 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.
Some fireworks from Pathum Nissanka (75) and Dasun Shanaka (47*) help Sri Lanka to a score of 183/5 🎆
— ICC (@ICC) February 26, 2022
Will it prove to be enough? 🤔 #INDvSL | 📝 https://t.co/rpWS0qitjC pic.twitter.com/f39j4lS7LQ
புதிய சாதனை படைக்குமா இந்திய அணி?
இன்று நடைபெற்று வரும் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், இந்திய அணி தொடர்ச்சியாக 11வது வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய பிறகு, இந்திய அணி வெற்றி பெறும் மூன்றாவது தொடர் என்ற சாதனையும் படைக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்