IND vs SL 1st ODI Score Live: 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா..!
IND vs SL 1st ODI Score Live: இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி குறித்த லைவ் அப்டேட்களை ஏபிபி நாடு லைவ் பக்கத்தில் காணலாம்.
LIVE
Background
தெலங்கானா: கால்வாயில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி..
தெலங்கானா முனிகடப்பா பகுதியில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பெண்கள், 1 குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா..!
இலங்கை அணிக்காக சனகா 108 ரன்கள் எடுத்திருந்தாலும் இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போர்ச்சுகல் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!
ஸ்பெயினை சேர்ந்த ரொபர்ட்டோ மார்ட்டினஸ், போர்ச்சுகல் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெல்ஜியம் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, உலகக்கோப்பை தொடரில் காலிறுதியில் தோல்வியுற்றதை அடுத்து, போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ் பதவி விலகினார்.
8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை.. போராடும் சனகா...!
இலங்கை அணியின் முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், கேப்டன் தசுன் சனகா மட்டும் பொறுப்புடன் ஆடி அரைசதம் விளாசியுள்ளார். இலங்கை அணி தற்போது 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களுடன் ஆடி வருகிறது.
உம்ரான் மாலிக் அபாரம்... 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இலங்கை..!
உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் தடுமாறிய இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

