IND vs SA Schedule: உலகக்கோப்பை முடிந்ததும் தென் ஆப்ரிக்கா பறக்கும் இந்திய கிரிக்கெட் அணி; போட்டி அட்டவணை இதோ..!
India’s Tour of South Africa ஐசிசி 2023ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
ஐசிசி 2023-ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
டிசம்பர் 10ஆம் தேதி துவங்கவுள்ள இந்த முத்தரப்புத் தொடர் 2024ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. உலககோப்பைத் தொடருக்குப் பின்னர் நடைபெறவுள்ள போட்டி என்பதால், இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரு அணிகளிலும் உள்ள சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதால், இரு அணிகளும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கக்கூடும் என உலகக் கிரிக்கெட் அரங்கில் இப்போதே பேச்சுகள் அடிபடுகின்றன.
போட்டிகள் விபரம்
டி20 போட்டிகள்
1. முதலாவது டி20 போட்டி - டிசம்பர் 10 - டர்பன்
2. இரண்டாவது டி20 போட்டி - டிசம்பர் 12 - ஜிக்யூபெர்கா
3. மூன்றாவது டி.20 போட்டி - டிசம்பர் 14 - ஜோஹன்னஸ்பெர்க்
ஒருநாள் போட்டிகள்
BCCI and @ProteasMenCSA announce fixtures for India’s Tour of South Africa 2023-24.
— BCCI (@BCCI) July 14, 2023
For more details - https://t.co/PU1LPAz49I #SAvIND
A look at the fixtures below 👇👇 pic.twitter.com/ubtB4CxXYX
1. முதலாவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 17 - ஜோஹன்னஸ்பெர்க்
2. இரண்டாவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 19 - ஜிக்யூபெர்கா
3. மூன்றாவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 21 - பார்ல்
டெஸ்ட் போட்டிகள்
1. முதலாவது டெஸ்ட் போட்டி - டிசம்பர் 26 - டிசம்பர் 30 - செஞ்சூரியன்
2. இரண்டாவது டெஸ்ட் போட்டி - 2024ஆம் ஆண்டு ஜனவரி 3 - ஜனவரி 7 - கேப்டவுன்
டெஸ்ட் தொடரில் ஃப்ரீடம் கோப்பைக்காக இரு அணிகள் மோதிக்கொள்வதுடன், இதன் தாக்கம் இரு அணிகளுக்கும் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை தொடர்
ஐசிசி தொடர்களில் ஒன்றான, ஒருநாள் உலக்கோப்பைத் தொடரை இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது. அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரை இந்திய அணி தனியாக நடத்துகிறது. இதற்கு முன்னர் 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பைத் தொடரை நடத்தியிருந்தாலும், அப்போதெல்லாம் இந்திய அணி ஆசிய நாடுகளுடன் இணைந்து நடத்தியுள்ளது. ஆனால் இம்முறைதான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனித்து நடத்துகிறது. மொத்தம் 46 நாட்கள் நடக்கும் இந்த தொடரில் 45 லீக் போட்டிகள், இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளது.