Watch Video | ”யாருடா நீ! நீ பால் போட்டாலே அவுட் ஆகுறாங்க..” : ஷர்துல் பற்றி கமெண்ட் அடித்த அஷ்வின்.. கலகல க்ரவுண்ட்..
ஷர்துல் தாகூர் 7 விக்கெட் எடுத்தது தொடர்பாக அஸ்வின் பேசிய யாருடா நீ வார்த்தை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷர்துல் தாகூரின் 7 விக்கெட் வேட்டையில், முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாப்ரிக்கா அணி 229 ரன்கள் குவித்தது. இதனால், வெறும் 27 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது தென்னாப்ரிக்கா.
ஜோஹனஸ்பெர்க் மைதானத்தில் தொடங்கிய இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில், ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகள் எடுக்க, ஷமி 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் எடுக்க, முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்திருக்கிறது தென்னாப்ரிக்க அணி.
தென்னாப்பிரிக்கா மண்ணில் மிகச்சிறந்த பந்துவீச்சை ஷர்துல் தாகூர் (7/61) பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு, கடந்த 2011-ம் ஆண்டு ஹர்பஜன் சிங்கின் (7/120) பந்துவீச்சே தென்னாப்ரிக்க மண்ணில் இந்திய பவுலரின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அந்த சாதனையை தற்போது முறியடித்திருக்கிரார் ஷர்துல் தாகூர். அதுமட்டுமின்றி, தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தநிலையில், ஷர்துல் தாகூர் 4 வது விக்கெட் எடுத்தபோது அஸ்வின் பேசிய யாருடா நீ வார்த்தை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், "யாரு டா நீ, எங்க இருந்து டா உன்ன பிடிச்சாங்க..? நீ பால் போட்டாலே விக்கெட் விழுகுது என்று கிண்டலடித்தார். அஸ்வின் பேசிய இந்த வீடியோ காட்சி பலரும் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.
Ash being heard on the stump pic after Thakur's 4th wicket:
— Srini Mama (@SriniMaama16) January 4, 2022
"Yarra nee, engendhu da pudichanga unna? Nee ball potaale wicket vizhum"
😂😂😂😂😂
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்