IND vs SA 1st T20: வெறித்தனம் காட்டும் பண்ட்.. கண்ணை மூடி பேட்டை சுற்றிய பாண்ட்யா.. வெளியான வீடியோ!
தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் வலைகளில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. முதல் போட்டியானது (இன்று) ஜூன் 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7:00 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னதாக, இந்த தொடரில் இந்திய அணியில் அனுபவ வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கேஎல் ராகுல் தலைமையில் முற்றிலும் இளம் இந்திய படையை பிசிசிஐ களமிறக்கியது. இந்தநிலையில், நேற்று காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் விலகினார். அவருக்கு பதிலாக துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியை வழிநடத்துவார் என்றும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் நியமிக்கப்பட்டனர்.
பெரும்பாலும் இந்திய கேப்டன் என்ற அங்கீகாரம் கிடைப்பது அனைவருக்கும் ஒரு பெரும் கனவு. அந்த கனவு தற்போது இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட்க்கு கிடைத்துள்ளது. மேலும், பண்ட் இந்திய அணியை முதன்முறையாக வழிநடத்தப் போவதால், அதுவும் சொந்த மைதானத்தில் கேப்டனாக களமிறங்க இருப்பதால் இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டதை காண முடிந்தது. அதேபோல், கேப்டன் பண்ட் நெட் பயிற்சியின்போது அபாரமான சிக்ஸர்களை பறக்கவிட்டும், பாண்ட்யா தனக்கே உரித்தான நோ-லுக் ஷாட்டை அடித்தும் அசத்தியுள்ளார்.
Prep ✅
— BCCI (@BCCI) June 9, 2022
Here we go 💪#TeamIndia | #INDvSA | @Paytm pic.twitter.com/HULFaMouEv
இதுகுறித்து பண்ட் அளித்த பேட்டியில், "இது ஒரு சிறந்த உணர்வு, குறிப்பாக உங்கள் சொந்த ஊரில் கேப்டன் பதவி போன்ற ஒரு வாய்ப்பைப் பெறுவது. அதைவிட பெரியது எதுவுமில்லை. நான் அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி 100 சதவீதத்தை வழங்க முயற்சிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் வலைகளில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ராகுல் இல்லாத நிலையில், இந்தியாவுக்கு தற்போது இரண்டு தொடக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதையடுத்து ருதுராஜு தனது முழு திறமையையும் வெளிப்படுத்த இந்த தொடர் ஒரு சிறந்த வாய்ப்பு.
Lights, camera & action! 📸 📸
— BCCI (@BCCI) June 9, 2022
Some Behind The Scenes fun from #TeamIndia's headshots shoot! 😎 👌#INDvSA | @Paytm pic.twitter.com/Vq9H9G19Qa
போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் போட்டோ ஷூட்டிலும் கலந்து கொண்டனர். வீரர்கள் நீல நிற இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு கேமரா முன் போஸ் கொடுப்பதைக் காணக்கூடிய வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்