IND vs SA 1st Oneday : குறுக்கிட்ட மழை.. தாமதமாக தொடங்கும் போட்டி.. அப்டேட்டை வெளியிட்ட பிசிசிஐ!
சொந்த மண்ணில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்கும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றதற்கு பிறகு, ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு லக்னோவில் தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக அரை மணிநேரம் தாமதமாக போட்டி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட பதிவில்,
மழையினால் தாமதம்! #INDvSA லக்னோ ஒருநாள் போட்டிக்கான டாஸ் மற்றும் மேட்ச் நேரம் அரை மணி நேரம் தாமதமாக போடப்பட உள்ளது.
டாஸ் இந்திய நேரம் மதியம் 1:30 மணிக்கு இருக்கும். மதியம் 2:00 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.” என்று பதிவிட்டுள்ளது.
🚨 Update 🚨
— BCCI (@BCCI) October 6, 2022
Rain delay!
After an early inspection, the Toss and Match Time for the #INDvSA Lucknow ODI has been pushed by half an hour.
The Toss will be at 1:30 PM IST.
Play begins at 2:00 PM IST.
இளம் இந்திய படை என்பதால் இந்திய அணியின் அனுபவமிக்க தொடக்க வீரரான ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஷ்ரேயா ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டியின்போது மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் சொந்த மண்ணில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்கும்.
Hello from Lucknow 👋
— BCCI (@BCCI) October 4, 2022
Preps for the #INDvSA ODI series begin. 👍 👍#TeamIndia | @mastercardindia pic.twitter.com/0y1qjtqmSU
அதன் அடிப்படியில், லக்னோவில் உள்ள இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கலக்கிய ரஜத் படிதார் இந்தத் தொடர் மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். அணியில் யாருக்கு இடம் என்ற போட்டியில் இவர்கள் இருவருக்குள் கடுமையான போட்டி நிலவும்.
போட்டி விவரங்கள்:
போட்டி: இந்தியா vs தென்னாப்பிரிக்கா 1வது ODI, 2022
தேதி: வியாழக்கிழமை, அக்டோபர் 06, 2022
நேரம்: மதியம் 2:00 மணி
இடம்: பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியை எங்கே பார்க்கலாம்?
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகிறது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியை நேரலையில் பார்க்க:
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி டிஸ்னி+ஹாட்ஸ்டார் செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார் , அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாஹர்.
ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), கேசவ் மகராஜ் (துணை கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜான்மேன் மலான், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னல், அண்டில் பெஹ்லுக்வேயோ, பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.