Ind vs Pak Asia Cup: பரபரப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற பாகிஸ்தான்... இந்தியாவுக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா?
Asia Cup 2025: துபாயில் நடைப்பெறும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்வதாக பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.
ஆசியக்கோப்பை:
ஆசியக்கோப்பை தொடரானது யுஏஇ-யில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளும் முதல் முறையாக இன்றைய போட்டியில் மோதவுள்ளது. இந்த போட்டியில் இந்திய விளையாடக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர்.
பாகிஸ்தான் பேட்டிங்:
துபாயில் நடைப்பெறும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பாகிஸ்தான் தங்களது முதல் ஆட்டத்தில் ஒமன் அணியையும், இந்தியா யுஏஇ அணியையும் வீழ்த்தி இருந்தது. இந்த போட்டியில் வெற்றிப்பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
மைதானம் எப்படி?
இந்த மைதானத்தில் இதுவரை 112 டி20 போட்டிகள் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த அணி 52 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. சேசிங் செய்த அணிகள் 59 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்த அணியின் சராசரி ரன்கள் 139 ஆகும். இரண்டாவது பேட் செய்த அணியின் சராசரி 121 ஆகும்.
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக இந்தியா அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 212 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 184 ரன்கள் வங்கதேசத்திற்கு எதிராக இலங்கை அணி சேஸ் செய்யப்பட்டுள்ளது.
பிளேயிங் 11 விவரம்:
பாகிஸ்தான்- சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ்(wk), ஃபகார் ஜமான், சல்மான் ஆகா(கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமது
இந்தியா - அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேட்ச்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (வ), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி





















