IND vs NZ : 300 விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது இந்தியர்... அடுத்தடுத்து அரங்கேறும் அஸ்வின் சாதனை!
சொந்த மண்ணில் 300 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
![IND vs NZ : 300 விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது இந்தியர்... அடுத்தடுத்து அரங்கேறும் அஸ்வின் சாதனை! IND vs NZ Test Ravichandran Ashwin became the second Indian to take 300 wickets on home soil IND vs NZ : 300 விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது இந்தியர்... அடுத்தடுத்து அரங்கேறும் அஸ்வின் சாதனை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/06/8c6ab37fa76994a8fe6aa293a36cf33c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் நேற்று முன் தினம் விக்கெட் இழப்பின்றி 69 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி, மூன்றாவது நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்து ஆடியது. கடந்த போட்டியில் 150 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால் தொடர்ந்து நேற்றும் சிறப்பாக ஆடினார். இந்திய அணி 276 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, நியூசிலாந்திற்கு 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, மூன்றாவது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது. இந்நிலையில், இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இன்று இந்திய அணி களம் இறங்கியது.
The 372-run victory is #TeamIndia's biggest victory by runs in Test cricket! #INDvNZ pic.twitter.com/Kfrpb1zv3i
— BCCI (@BCCI) December 6, 2021
இன்று போட்டி தொடங்கிய 45 நிமிடங்களுக்குள் ஜெயந்த யாதவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 4 விக்கெடுகள் விழ, கடைசியாக அஷ்வின் பந்துவீச்சில் 10வது விக்கெட் விழுந்து போட்டியும் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் 60 ரன்களும், நிகோலஸ் 44 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்களும், அக்சர் 1 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தார். 2 வது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 150 மற்றும் 62 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை அள்ளிய அஸ்வின் தொடர் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும், 2 வது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் அஸ்வின் சொந்த மண்ணில் 300 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்திய அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ளே 350 விக்கெட்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். அதேபோல்,
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய வீரர்கள்:
முத்தைய முரளிதரன்-493
ஆண்டர்சென்-402
அனில் கும்ப்ளே-350
வார்னே- 319
பிராட்-314
ரவிச்சந்திரன் அஸ்வின்-300*
6 வது இடத்திலும் உள்ளார்.
சொந்த மண்ணில் குறைந்த இன்னிங்ஸில் அதிவேகமாக 300 விக்கெட்கள் கைப்பற்றியவர் பட்டியல் :
48 முத்தையா முரளிதரன்
49 ரவிச்சந்திரன் அஸ்வின்
52 அனில் கும்ப்ளே
65 வார்னே
71 ஆண்டர்சென்
76 பிராட்
2 வது இடத்திலும் உள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)