(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: 'தி கிரேட் இந்தியன் சுவர்' டிராவிட் கைகளில் இருந்து சுழலும் பந்து... அரிதான காட்சி இதோ!
Rahul Dravid Bowling Video: பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வலைப்பயிற்சியில் பந்து வீசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி20 உலக கோப்பை பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில், புதிய கூட்டணியான ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் . இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டிகளையும் வென்று டி20 தொடரை கைப்பற்றியது. அதனை அடுத்து, டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்க உள்ளது.
டி 20 தொடருக்கு பிறகு இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரஹானே கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில், தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல் ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெஸ்ட் தொடரில் ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியின் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
𝗦𝗼𝗺𝗲 𝗿𝗶𝗴𝗵𝘁-𝗮𝗿𝗺 𝗼𝗳𝗳-𝘀𝗽𝗶𝗻 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲? 🤔
— BCCI (@BCCI) November 24, 2021
🎥 That moment when #TeamIndia Head Coach Rahul Dravid rolled his arm over in the nets. 👍 👍#INDvNZ @Paytm pic.twitter.com/97YzcKJBq3
டி 20 தொடரை வென்றது போலவே டெஸ்ட் தொடரை வெல்லும் முயற்சியில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியளித்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்போதும், கையில் பேட்டுடன் திரியும் ராகுல் டிராவிட், வலை பயிற்சியில் சூழல் பந்து வீசிய வீடியோ இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு காணக்கிடைக்காத ஒன்று. தற்போது இந்த வீடியோவை இந்திய ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
📸 📸 When #TeamIndia hit the ground running in Kanpur ahead of the 1st #INDvNZ Test. @Paytm pic.twitter.com/qbMejsdzxW
— BCCI (@BCCI) November 23, 2021
அணி விவரம் :
ஜிங்கே ரஹானே (கேப்டன்), புஜாரா (துணை கேப்டன் ), சூர்யகுமார் யாதவ், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், விருத்திமான் சஹா, கே.எஸ்.பரத், ஜடேஜா, ரவி அஸ்வின், அக்சர் பட்டேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசாத் கிருஷ்ணா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கீரின் பார்க் மைதானத்தில் வருகின்ற நவம்பர் 25 ம் தேதி தொடங்கி 29 வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டியானது மும்பையில் உள்ள புகழ்மிக்க வான்கேடே மைதானத்தில் வருகிற டிசம்பர் 3 ம் தேதி தொடங்கி 7 ம் தேதி வரையும் நடைபெற இருக்கிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்