Shubman Gill ODI Record: மாஸ் காட்டும் சுப்மன் கில்...! பாபர் அசாமை சமன் செய்து அசத்தல்.. தவானை பின்னுக்கு தள்ளி மிரட்டல்..!
இந்திய அணியின் சுப்மன்கில் இன்று விளாசிய சதம் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
![Shubman Gill ODI Record: மாஸ் காட்டும் சுப்மன் கில்...! பாபர் அசாமை சமன் செய்து அசத்தல்.. தவானை பின்னுக்கு தள்ளி மிரட்டல்..! IND vs NZ, 3rd ODI: Shubman Gill Equals Babar Azam's Record After Century Against New Zealand know details Shubman Gill ODI Record: மாஸ் காட்டும் சுப்மன் கில்...! பாபர் அசாமை சமன் செய்து அசத்தல்.. தவானை பின்னுக்கு தள்ளி மிரட்டல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/24/0201462cb55b40bf7316a903f78673681674563682384333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்று மூன்றாவது மற்றும் கடைசிஒ ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆடி வருகிறது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்களை விளாசியுள்ளது.
அசத்தும் சுப்மன்கில்:
இந்த போட்டியில் இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித்சர்மாவும், சுப்மன்கில்லும் அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினர். இளம் வீரர் சுப்மன்கில் 78 பந்துகளில் 5 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 112 ரன்களை விளாசினார். இந்த சதத்தின் மூலம் சுப்மன்கில் பல்வேறு அரிய சாதனைகளை படைத்துள்ளார். இன்றைய போட்டி மூலம் சுப்மன்கில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சாதனையை சமன் செய்துள்ளார்.
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பாபர் அசாம் சாதனையை இன்று சுப்மன்கில் சமன் செய்துள்ளார். இதற்கு முன்பு பாபர் அசாம் 2016ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 360 ரன்களை விளாசியதே 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளாசப்பட்ட அதிக ரன்களாக இருந்து வந்தது.
பாபர் அசாம், ஷிகர்தவான்:
நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரட்டை சதம், சதத்துடன் 360 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இதன்மூலம் பாபர் அசாம் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 4 சதங்களை விளாசிய இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் சுப்மன்கில் இன்று முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய தொடக்க வீரர் ஷிகர்தவான் 24 இன்னிங்ஸ்களில் 4 சதங்களை விளாசியிருந்தார். ஆனால், சுப்மன்கில் 21 இன்னிங்சில் அந்த சாதனையை செய்துள்ளார். சுப்மன்கில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருநாள் போட்டியில் இளவயதிலே இரட்டை சதம் விளாசிய கிரிக்கெட் வீரர் என்ற மகத்தான சாதனையை முதல் போட்டியில் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர் சுப்மன்கில் கடந்த 2019ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அவர் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 1 இரட்டை சதம், 5 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டியில் 1254 ரன்களை விளாசியுள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் 74 ஆட்டங்களில் ஆடி 14 அரைசதங்களுடன் 1900 ரன்களை எடுத்துள்ளார்.
சுப்மன்கில் - ரோகித்சர்மா அபார ஆட்டத்தால் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அசத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs NZ, 3rd ODI:நியூசிலாந்துக்கு வெற்றி பெற 386 ரன்கள் நிர்ணயித்த இந்திய அணி; தொடக்க ஜோடி சதம் விளாசி அசத்தல்..!
மேலும் படிக்க: Rohit Sharma Record: ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா.. மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றம்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)