Watch Video: இந்தியா vs நியூசி., இரண்டாவது டி20 போட்டி ; பர்ப்பிள் கேப் வின்னர் ஹர்ஷல் பட்டேல் அறிமுகம்
முதல் போட்டியில் ஐபிஎல் 2021 தொடரில் கலக்கிய வெங்கடேஷ் ஐயர் அறிமுகமானதை அடுத்து, இரண்டாவது போட்டியிலும் ஒரு வீரர் அறிமுகமாகி இருக்கிறார்.
உலககோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியுடன் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஊரான ராஞ்சியில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. உள்நாட்டு மைதானத்தில் ஆடுவதாலும், முதல் போட்டியில் வெற்றி பெற்றதாலும் இந்திய அணி இந்த போட்டியில் உற்சாகமாக ஆடும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்திருக்கிறார். இந்த போட்டியில், ஐபிஎல் பர்பிள் கேப் வின்னர், ஹர்ஷல் பட்டேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறார். அறிமுகத்திற்கான இந்திய அணி தொப்பியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜீத் அகார்கரிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.
முதல் போட்டியில் ஐபிஎல் 2021 தொடரில் கலக்கிய வெங்கடேஷ் ஐயர் அறிமுகமானதை அடுத்து, இரண்டாவது போட்டியிலும் ஒரு வீரர் அறிமுகமாகி இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஹர்ஷல் பட்டேல் அறிமுக வீடியோ:
🎥 🎥 Congratulations to @HarshalPatel23 who is set to make his #TeamIndia debut. 👏 👏@Paytm #INDvNZ pic.twitter.com/n9IIPXFJQ7
— BCCI (@BCCI) November 19, 2021
இரு அணிகள் விவரம்:
இந்திய அணி:
2nd T20I. India XI: KL Rahul, R Sharma, S Yadav, R Pant, S Iyer, V Iyer, A Patel, R Ashwin, B Kumar, D Chahar, H Patel https://t.co/9m3WfkVaaq #INDvNZ @Paytm
— BCCI (@BCCI) November 19, 2021
நியூசிலாந்து அணி:
2nd T20I. New Zealand XI: M Guptill, D Mitchell, M Chapman, G Phillips, T Seifert, J Neesham, M Santner, A Milne, T Southee, I Sodhi, T Boult https://t.co/9m3WfkVaaq #INDvNZ @Paytm
— BCCI (@BCCI) November 19, 2021
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்