IND vs NZ 2nd T20: சூர்யகுமார் மிரட்டல் சதம்...! 191 ரன்கள் விளாசிய இந்தியா..! இலக்கை எட்டுமா நியூசி..?
IND vs NZ 2nd T20: அதிரடியாக ஆடி வந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் சூர்ய குமார் யாதவ் அதிரடியாக சதம் விளாசியுள்ளார்.
IND vs NZ 2nd T20: அதிரடியாக ஆடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சதம் விளாசியுள்ளார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 191 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் சார்பில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் விளாசியுள்ளார். அவர் மொத்தம் 11 ஃபோர், 7 சிக்ஸர் என அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இந்த சதம் சர்வதேச டி20 போட்டியில் சூர்யகுமார் யாதாவின் இரண்டாவது சதமாகும்.
Innings Break!
— BCCI (@BCCI) November 20, 2022
A @surya_14kumar special here at the Bay Oval, Mount Maunganui! ⚡️ ⚡️#TeamIndia post a massive target of 192 against New Zealand 👏👏
Scorecard ▶️ https://t.co/mIKkpD4WmZ #NZvIND pic.twitter.com/uI9iSd7UDk
நியூசிலாந்து தரப்பில் 20வது ஓவரை வீசிய டிம் சவுதி ஹர்திக், ஹூடா, சுந்தர் என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
ஹர்திக்கின் புதிய யுக்தி
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக இடக்கை பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த் மற்றும் இஷான் கிஷன் களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதன் பின்னர் அடித்து ஆடத்தொடங்கிய இஷான் கிஷன் அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார். கொஞ்சம் தடுமாறி வந்த ரிஷப், பெர்குசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
மழை குறுக்கீடு
அதன் பின்னர் களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷனுடன் இணைந்து அடித்து ஆட ஆரம்பித்தார். போட்டி 6.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இரண்டாவது டி20 போட்டியும் மழையால் நிறுத்தப்பட்டு விடுமோ என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் மழை சிறுது நேரத்தில் நின்றதும் போட்டி ஆரம்பம் ஆனது. மழைக்குப் பின்னர் இஷான், ஸ்ரேயஸ் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் சூர்யகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்று ஆடி, தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தினை எட்டினார். அவர் 51 பந்துகளில் 51 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். மொத்தம் 11 ஃபோர், 7 சிக்ஸர் என நாலாபுறமும் வானவேடிக்கை காட்டினார்.
ஹாட்ரிக் எடுத்த டிம் சவுதி
போட்டியின் கடைசி ஓவரை வீசிய டிம் சவுதி இந்திய அணியின் கேப்டன் ஹர்திக், தீபக் ஹூடா மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.