(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: "வராத.. அப்படியே போயிடு" துள்ளிக்குதித்து ரிஷப்பண்டை விரட்டிய சர்பராஸ் கான் - நீங்களே பாருங்க
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப்பண்டை சர்பராஸ் கான் ரன் எடுக்க வர வேண்டாம் என்று மைதானத்திலே துள்ளிக் குதித்து திரும்பிச் செல்லுமாறு கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி 402 ரன்களை எடுத்தது.
சர்பராஸ்கான் - ரிஷப்பண்ட்:
இதையடுத்து, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் நேற்று ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. விராட் கோலி கடைசி பந்தில் 70 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, இன்றைய நாள் ஆட்டத்தை சர்ப்ராஸ் கானும் – ரிஷப் பண்ட்டும் தொடங்கினார்.
இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சர்ப்ராஸ்ச கான் அதிரடியாக ஆட, ரிஷப்பண்ட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது, மேட் ஹென்றி வீசிய பந்தில் சர்ப்ராஸ் கான் அடித்த பந்து ஃபீல்டரிடம் சென்றது. அதற்குள் ரிஷப்பண்ட் – சர்ப்ராஸ் கான் ஒரு ரன்னை ஓடி எடுத்தனர்.
துள்ளிக்குதித்த சர்பராஸ்:
"Raw Emotion"😬😮
— Sports In Veins (@sportsinveins) October 19, 2024
Why Test Cricket is Known as the Greatest Formate of Cricket.#INDvsNZ #INDvNZ #RishabhPant #sarfrazkhan pic.twitter.com/sH2FJaySeL
ஆனால், ரிஷப்பண்ட் அதற்குள் இரண்டாவது ரன் எடுப்பதற்காக ஓடி வந்தார். அவர் சர்பராஸ் கானை ரிஷப்பண்ட் திரும்பி பார்க்கவே இல்லை. ஆனால், ஃபீல்டர் பந்தை விக்கெட் கீப்பரிடம் எறிந்தார். சர்ப்ராஸ் கானே ஓடி வர வேண்டாம் என்று கத்தினார். அவர் கத்தியதை ரிஷப்பண்ட் பார்க்கவே இல்லை. இதனால், பிட்ச்சில்லே சர்பராஸ் கான் குதித்து குதித்து வர வேண்டாம் என்று சைகை காட்டினார்.
அப்போதுதான் ரிஷப்பண்ட் அவரைப் பார்த்தார். பின்னர், மீண்டும் கிரிசிற்குள் ஓடினார். அதற்குள் விக்கெட் கீப்பர் ப்ளெண்டல் பந்தை பிடித்து வீசினார். ஆனால், அதிர்ஷ்டவசமாக பந்து ஸ்டம்பில் படவில்லை. இதனால், ரிஷப்பண்ட் தப்பினார்.
ரிஷப்பண்டை வர வேண்டாம் என்று சர்பராஸ் கான் வேடிக்கையான முறையில் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.