(Source: ECI/ABP News/ABP Majha)
India Squad for Ireland Tour: அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் அறிவிப்பு... கேப்டனான ஹர்திக் பாண்டியா!
ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்தில் இந்தப் போட்டிகள் நடைபெறும் நிலையில், தற்போதைய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியைப் போலவே இளம் வீரர்களுக்கு இதிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டி20 போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இப்போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா கேப்டன்
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், வரும் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில், தற்போதைய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளைப் போலவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
🚨 JUST IN: First-time captain set to lead India in T20Is against Ireland.
— ICC (@ICC) June 15, 2022
Squad details 👇https://t.co/eeYIrgpRzr
முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் 2022 போட்டிகளில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா இந்த அயர்லாந்து சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வீரர்கள்
India Squad
— BCCI (@BCCI) June 15, 2022
Hardik Pandya (C), Bhuvneshwar Kumar (vc), Ishan Kishan, Ruturaj Gaikwad, Sanju Samson, Suryakumar Yadav, Venkatesh Iyer, Deepak Hooda, Rahul Tripathi, Dinesh Karthik (wk), Yuzvendra Chahal, Axar Patel, R Bishnoi, Harshal Patel, Avesh Khan, Arshdeep Singh, Umran Malik
மேலும், புவனேஷ்வர் குமார் (WC), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (WK), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய், ஹர்ஷல் படேல் , அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதால், அயர்லாந்து தொடருக்கு புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்