IND vs IRE 1st T20: எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்.. செக் வைத்த வெதர் அப்டேட்.. அயர்லாந்துடன் முதல் டி20 போட்டி இன்று..!
IND vs IRE 1st T20: அயர்லாந்து சென்றுள்ள இளம் இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
IND vs IRE 1st T20: அயர்லாந்து சென்றுள்ள இளம் இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-3 என்ற அளவில் இழந்த பின்னர் இந்திய அணி அயர்லாந்து அணியுடன் விளையாடவுள்ளதால், இந்த தொடரை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையில் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் மூன்று போட்டிகளில் முதலாவது டி20 போட்டி இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அயர்லாந்தில் உள்ள மிகவும் பிரசித்த மைதானமான தி வில்லேஜ் டப்ளின் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் முழுவதும் இந்த மைதானத்தில் தான் மூன்று போட்டிகளிலும் நடைபெறவுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்திய அணியை வழிநடத்துவதால் இந்திய அணியை டி20 போட்டிகளில் வழிநடத்தும் 11வது கேப்டனாகிறார். மேலும், டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுகிறார் பும்ரா. மேலும் காயம் காரணமாக சிகிச்சை மற்றும் அதைத் தொடர்ந்து ஓய்வு என கிட்டத்தட்ட 11 மாதங்களுப் பிறகு இந்திய அணிக்கு பும்ரா திரும்பியுள்ளதால் பும்ராவின் மீதான எதிர்பார்ப்பு இந்திய அணி நிர்வாகத்திற்கு அதிகமாகவே உள்ளது.
மழையால் போட்டி பாதிப்பா..?
டப்ளினில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 15 டிகிரியாகவும் இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்ய 100 சதவீதம் வாய்ப்புள்ளதால், முதல் டி20 போட்டி மழையால் பாதிக்கப்படலாம்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷாபாஸ் அகமது, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய், பிரசித் சிங், அர்ஷ்தீப் கிருஷ்ணா, அர்ஷ்தீப் கிருஷ்ணா, குமார், அவேஷ் கான்.
இந்தியாவுக்கு எதிரான டி20க்கான அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ராஸ் அடேர், ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், ஃபியோன் ஹேண்ட், லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), மார்க் அடேர், ஜோஷ்வா லிட்டில், பேரி தியோக் வான் வொர்காம், பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.
அயர்லாந்து vs இந்தியா T20 தொடரை டிவியில் எப்படி பார்க்கலாம்..?
இந்தியா vs அயர்லாந்து தொடரினை ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக பார்க்கலாம்.
அயர்லாந்து vs இந்தியா T20 தொடரை எந்த ஓடிடி தளத்தில் நேரடியாக பார்க்கலாம்..?
அயர்லாந்து vs இந்தியா டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பு ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேருக்கு நேர்:
இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே இதுவரை மொத்தம் 5 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில், ஐந்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2022ம் ஆண்டு விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.