IND vs ENG 2nd ODI: காயத்தில் இருந்து மீண்ட கோலி..! ஆடும் லெவனில் மீண்டும் வந்ததால் ரசிகர்கள் உற்சாகம்..!
இடுப்பில் ஏற்பட்ட காயம் குணமாகியதால் விராட்கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் இன்று 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன. கடந்த போட்டியில் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட்கோலி களமிறங்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இந்த நிலையில், விராட்கோலி இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்குவாரா? மாட்டாரா? என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்த சூழலில், விராட்கோலி நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டதால் அவரது ரசிகர்கள் விராட்கோலி மீண்டும் களமிறங்குவார் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். அதேபோல, இன்று லார்ட்சில் நடைபெறும் போட்டியில் விராட்கோலி களமிறங்கியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விராட்கோலி இடுப்பில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ளார். சமீபகாலமாகவே தொடர்ந்து மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வரும் ரன் மெஷின் விராட்கோலி இந்த போட்டியில் மீண்டும் தனது பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
A look at our Playing XI for the 2nd ODI.
— BCCI (@BCCI) July 14, 2022
Virat Kohli back in the XI
Live - https://t.co/N4iVtxbfM7 #ENGvIND pic.twitter.com/yeJIf2xTvz
கடந்த போட்டியில் இடம்பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டு அவருக்கு பதிலாக விராட்கோலி களமிறங்கியுள்ளார். மற்றபடி ஆடும் லெவனில் பெரிய மாற்றங்கள் இல்லை. கேப்டன் ரோகித்சர்மா, ஷிகர்தவான், சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, பும்ரா, ஷமி, பிரசித் கிருஷ்ணா மற்றும் சாஹல் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வெல்லும்.

கடந்த போட்டியில் இங்கிலாந்தை 110 ரன்களுக்கு சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் இந்திய வீரர்கள் இன்றைய போட்டியில் உற்சாகத்துடனே களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க : IND vs WI T20 Squad: கோலி, பும்ரா இல்லை: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு
மேலும் படிக்க : ICC Rankings 2022: பறந்த ஸ்டெம்புக்கு கிடைத்த பரிசு... ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த பும்ரா..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




















