IND vs ENG 2nd ODI: "அன்று சாதனையாளர்கள்...! இன்று ரசிகர்கள்..!" லார்ட்ஸ் கேலரியில் ஜாம்பவான்கள் சச்சின் - கங்குலி..!
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து போட்டியை கங்குலியும், சச்சின் டெண்டுல்கரும் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.
இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆடி வருகிறது, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்த போட்டியை காண்பதற்காக புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியுள்ளனர்.
இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான்ளும், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுமான சச்சின் டெண்டுல்கரும், சவ்ரவ் கங்குலியும் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.
Legendary pair back at @HomeOfCricket ☺️👌👌@sachin_rt @SGanguly99 pic.twitter.com/eIIVS0A30l
— BCCI (@BCCI) July 14, 2022
இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கரும், சவ்ரவ் கங்குலியும் ஏராளமான போட்டிகளில் லார்ட்ஸ் மைதானத்திலும், இங்கிலாந்திலும் இணைந்து ஆடியுள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருாள் போட்டியில் ஷிகர்தவான் – ரோகித்சர்மா ஜோடி சச்சின் டெண்டுல்கர்- சவ்ரவ் கங்குலி ஜோடிக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய ஜோடி என்ற அரிய சாதனையை படைத்தது. சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சரி, ஒட்டுமொத்த அளவிலும் சரி அதிகளவில் ஜோடியாக ரன்களை குவித்த இணை என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரும், சவ்ரவ் கங்குலியும் தங்களது வசம் வைத்துள்ளனர்
லார்ட்ஸ் மைதானம் கங்குலிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மைதானம் ஆகும். இந்த மைதானத்தில்தான் கங்குலி தனது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதே போட்டியில் சதமடித்து அசத்தினார். கடந்த 2002ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நாட்வெஸ்ட் தொடரை கேப்டனாக வென்று கலக்கினார். அந்த போட்டியில் லார்ட் மைதான பால்கனியில் நின்று தனது டீ சர்ட்டை கழற்றி கங்குலி சுத்தியது இன்றும் இளைஞர்களால் அதிகம் விரும்ப்படும் ஒன்றாக உள்ளது.
கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் அதிக சதங்கள், ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள், டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் என்ற மகத்தான சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்