IND vs BAN 2nd Test: இரண்டாவது டெஸ்டிலும் ரோகித் இல்லை.. காயத்தால் விலகிய நவ்தீப் சைனி.. புதிய அணியை அறிவித்த பிசிசிஐ!
காயம் காரணமாக ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
காயம் காரணமாக ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
டாக்காவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின்போது ரோகித் சர்மாவுக்கு இடது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிசிசிஐ மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
காயம் முழுமையாக குணமடைந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா முழு தீவிரத்துடன் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்ய சில காலம் தேவை என்று மருத்துவக் குழு கருத்து தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NEWS - Rohit Sharma and Navdeep Saini ruled out of second Test against Bangladesh.
— BCCI (@BCCI) December 20, 2022
More details here - https://t.co/CkMPsYkvFQ #BANvIND pic.twitter.com/qmVmyU5bQ6
அதேபோல், வயிற்று தசைப்பிடிப்பு காரணமாக நவ்தீப் சைனியும் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இவரும் காயம் குறித்து விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.
வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: கேஎல் ராகுல் (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ,ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்