IND VS AUS: வேற லெவல்யா நீ..! டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள்.. விராட் கோலியை பின்னுக்குத்தள்ளிய ஷமி..!
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் கோலி, இதுவரை 24 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஆனால், ஷமி 25 சிக்ஸர்கள் அடித்து விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார்.
![IND VS AUS: வேற லெவல்யா நீ..! டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள்.. விராட் கோலியை பின்னுக்குத்தள்ளிய ஷமி..! IND VS AUS: MOHAMMED SHAMI CROSSES VIRAT KOHLI’S TALLY OF SCORING MORE sixes IN TEST CRICKET IND VS AUS: வேற லெவல்யா நீ..! டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள்.. விராட் கோலியை பின்னுக்குத்தள்ளிய ஷமி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/500a3e12d6591acbda751ef4c94c12e11676102056347571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 400 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 120, அக்சர் பட்டேல் 84, ரவீந்திர ஜடேஜா 70 ரன் எடுத்திருந்தனர்.
மூன்றாம் நாள்:
மூன்றாம் நாள் தொடக்கத்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா, 185 பந்துகள் விளையாடி 70 ரன்கள் எடுத்து டாட் மர்பி வீசிய 119 ஓவரில் க்ளீன் போல்டானார். தொடர்ந்து, டாட் மர்பி வீசிய 131 வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அக்ஸர் பட்டேல் கலக்கினார். அவருக்கு உறுதுணையாக முகமது ஷமியும் அவ்வபோது சிக்ஸர்களை தெறிக்கவிட்டார்.
அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் எடுத்து போராடியபோது, முகமது ஷமி 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதில், இரண்டு சிக்ஸர்கள் ஆஸ்திரேலியாவின் ஹீரோ, மர்புக்கு எதிராக அடித்தார். இந்த சிக்ஸர்கள் மூலம், விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் ஷமி.
Shami 🔥 pic.twitter.com/LlrOFds6xd
— 📂 (@Cricketfiles18) February 11, 2023
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் கோலி, இதுவரை 24 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஆனால், ஷமி 25 சிக்ஸர்கள் அடித்து விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சில மூத்த முக்கிய பேட்டர்கள் கோஹ்லி (24), யுவராஜ் சிங் (21) மற்றும் KL ராகுல் (17) ஆகியோரை விட இப்போது அதிகமாக உள்ளது. ஹர்பஜன் சிங் (42), ஜாகீர் கான் (28) ஆகியோரும் முன்னாள் இந்திய கேப்டனை விட அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்தவர் முன்னாள் நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம். 2004 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரெண்டன் மெக்கல்லம் விளையாடிய 101 டெஸ்ட் போட்டிகளில் 107 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் வீரேந்திர சேவாக். 104 போட்டிகளில் 91 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
#Shami bhai ne mara chhakka,#Murphy reh gaya hakka bakka!#CricketTwitter #BGT2023 #INDvsAUS pic.twitter.com/dhDpG73OpG
— Asli BCCI Women (@AsliBCCIWomen) February 11, 2023
இந்திய அணிக்காக டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்: (ஐசிசிக்காக ஒரு சிக்சர்)
90 - வீரேந்திர சேவாக்
78 - எம்எஸ் தோனி
69 - சச்சின் டெண்டுல்கர்
66 - ரோஹித் சர்மா
61 - கபில் தேவ்
57 - சவுரவ் கங்குலி
55 - ரிஷப் பந்த்
55 - ரவீந்திர ஜடேஜா
42 - ஹர்பஜன் சிங்
38 - நவ்ஜோத் சிங் சித்து
34 - அஜிங்க்யா ரஹானே
33 - முரளி விஜய்
28 - மயங்க் அகர்வால்
28 - ஜாகீர் கான்
26 - சுனில் கவாஸ்கர்
25 - முகமது ஷமி*
24 - விராட் கோலி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)