மேலும் அறிய

KL Rahul's Captaincy: இதுவரை கேப்டனாக ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் எப்படி..? உலா வரும் மோசமான ரெக்கார்ட்ஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக கே.எல்.ராகுலின் கேப்டன்ஷி மற்றும் பேட்டிங் திறன் பற்றி பார்ப்போம்.. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடரின் முதல் 2 போட்டிகளுக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலின் பேட்டிங் சொல்லுபடியாக எதுவும் இல்லை. தொடர்ந்து, பேட்டிங்கில் சொதப்பி வந்துள்ளார். இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக கே.எல்.ராகுலின் கேப்டன்ஷி மற்றும் பேட்டிங் திறன் பற்றி பார்ப்போம்.. 

கேப்டனாக கே.எல்.ராகுல் பேட்டிங் எப்படி இருந்துள்ளது..? 

இந்திய அணிக்காக இதுவரை கே.எல்.ராகுல் கேப்டனாக 7 ஒருநாள் போட்டிக்கு தலைமை தாங்கியுள்ளார். ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் சொதப்பியுள்ளார். கே.எல்.ராகுல்  கேஎல் ராகுல் கேப்டனாக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில், கே.எல்.ராகுலின் சராசரி 19.16 ஆகவும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 68.86 ஆகவும் இருந்துள்ளது. கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் கே.எல். ராகுல் அதிகபட்ச ஸ்கோர் 55 ரன்கள் மட்டுமே ஆகும். 

கேப்டனாக எத்தனை போட்டிகளில் வெற்றி..? 

இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் 7 ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார் என்ற விவரத்தை மேலே பார்த்தோம். அதில், இவரது தலைமையில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வெற்றிகளும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 போட்டிகளும், வங்கதேசத்திற்கு எதிரான 1 போட்டியும் வெற்றி கண்டுள்ளது. 

மீதமுள்ள 3 போட்டிகளும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இது தென்னாப்பிரிக்காவின் சொந்த மண்ணில் நடந்த போட்டி தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் கேப்டனாக கொண்ட வெற்றி சதவீதம் 57.15 சதவீதமாகவும், தோல்வி சதவீதம் 42.85 சதவீதமாகவும் உள்ளது. 

ஒருநாள் போட்டியில் கேப்டனாக கே.எல்.ராகுல் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான களமிறங்கினார். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதேபோல், தனது கடைசி ஒருநாள் போட்டியில் கேப்டனாக கே.எல்.ராகுல், 2022 டிசம்பர் 10ம் தேதி விளையாடினார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. 

ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் எப்படி..? 

இதுவரை இந்திய அணிக்காக கேஎல் ராகுல் 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2155 ரன்கள் குவித்துள்ளார். இதில், கேஎல் ராகுலின் சராசரி 46.85 ஆகவும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 86.79 ஆகவும் இருந்துள்ளது. கேஎல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள், 13 முறை ஐம்பது ரன்களை கடந்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுலின் அதிகபட்ச ஸ்கோர் 112 ரன்கள் ஆகும். 

ஆஸ்திரேலிய தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய அணியின் நியமிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

கணிக்கப்பட்ட இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

கணிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா மற்றும் தன்வீர் சங்கா.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget