மேலும் அறிய

IND Vs AUS LIVE Score: பதம் பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா; 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

India Vs Australia 2nd T20 Live Updates: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் லைவ் ஸ்கோர் குறித்து ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
IND Vs AUS LIVE Score: பதம் பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா; 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Background

IND Vs AUS 2nd T20: திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:

கடந்த வாரத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது.  அதேபோல் ஆஸ்திரேலியா தரப்பிலும் அதிகப்படியாக இளம் வீரர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் 209 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை அதிரடியாக எட்டிய இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி-20 போட்டி தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 

அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த  போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியில் வென்று தொடரில் மேலும் முன்னிலை பெற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு இருக்கும் ப்ளஸ்

ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது இந்திய அணி வீரர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய வீரர்கள் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இல்லை என்றால் டி 20 தொடரையும் தாரை வார்க்க வேண்டி வரும்.  உலகக் கோப்பையில் விளையாடிய அணியை பெரிய மாற்றம் எதுவும் இன்றி ஆஸ்திரேலிய அணி அப்படியே களமிறக்கியுள்ளது. முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட மேக்ஸ்வெல், ஜாம்பா டிராவிஸ் ஹெட் ஆகியோர் இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகள் விபரம்

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்(கேட்ச்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா

ஆஸ்திரேலியா ப்ளேயிங் லெவன்: ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா

22:51 PM (IST)  •  26 Nov 2023

IND Vs AUS LIVE Score: பதம் பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா; 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து  191 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

22:14 PM (IST)  •  26 Nov 2023

IND Vs AUS LIVE Score: ஸ்டாய்னஸ் அவுட்..!

ஆஸ்திரேலியா அணியின் தோல்வி வித்தியாசத்தினை குறைக்க போராடிய ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

22:08 PM (IST)  •  26 Nov 2023

IND Vs AUS LIVE Score: 5 வது விக்கெட்டினை இழந்தது ஆஸ்திரேலியா

13.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

22:00 PM (IST)  •  26 Nov 2023

IND Vs AUS LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது

12 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:51 PM (IST)  •  26 Nov 2023

IND Vs AUS LIVE Score: 100 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா

10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Embed widget