Watch Video: முதல் பாலே.. முதல் விக்கெட்.. தட்டித்தூக்கிய முகமது சிராஜ்.. ஆக்ரோஷமாய் கர்ஜித்த டிராவிட்! வைரல் வீடியோ
முதல் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளின் தொடக்கத்தில் முகமது சிராஜ் இந்தியாவுக்காக முதல் விக்கெட்டை தனது முதல் பந்திலேயே எடுத்து கொடுத்தார்.
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளும் விளையாடும் டெஸ்ட் தொடர் பார்டர்-கவாஸ்கர் கோப்பை என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.
முதல் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளின் தொடக்கத்தில் முகமது சிராஜ் இந்தியாவுக்காக முதல் விக்கெட்டை தனது முதல் பந்திலேயே எடுத்து கொடுத்தார். இதை பார்த்த இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக கத்தினார். தற்போது அந்த வீடியோதான் இணையத்தில் அதிவேகமாக ட்ரெண்டாகி வருகிறது.
#Siraj hits the pad with his first ball, the umpire denies the appeal, review taken with one second left and the tracker shows the ball hitting wickets. That's the beauty of Test Cricket.#BorderGavaskarTrophy
— Filmaholic (@filmaholic_) February 9, 2023
#INDvsAUS pic.twitter.com/KzhfZtJ5vn
போட்டியின் முதல் ஓவரை வீசிய சிராஜ், ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவிடம் அவுட்ஸ்விங்கர் முறையில் பந்துவீசினார். அப்போது, அந்த பந்தானது கவாஜாவின் பேடில் பட்டது.
𝑰. 𝑪. 𝒀. 𝑴. 𝑰!
— BCCI (@BCCI) February 9, 2023
1⃣ wicket for @mdsirajofficial 👌
1⃣ wicket for @MdShami11 👍
Relive #TeamIndia's early strikes with the ball 🎥 🔽 #INDvAUS | @mastercardindia pic.twitter.com/K5kkNkqa7U
இதனால், முகமது சிராஜ் மற்றும் இந்திய அணி எல்பிடபிள்யூ முறையில் அப்பீல் செய்தது. ஆனால், நடுவராக நின்ற நிதின் மேனன் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. சிராஜ் ரோகித்திடம் ரிவ்யூ கேட்கும்படி கூறினார். ரிவ்யூ சென்றபோது எல்பிடபிள்யூ உறுதியாக கவாஜா வெளியேறினார்.
இதன்பிறகு, அடுத்த ஓவரிலேயே வார்னரை பெவிலியனுக்கு அனுப்பினார் ஷமி. வார்னர் 5 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்த நிலையில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
TIMBER! 👌 👌@MdShami11 rattles the stumps & how! 👍 👍
— BCCI (@BCCI) February 9, 2023
Australia 2⃣ down as David Warner departs
Follow the match ▶️ https://t.co/SwTGoyHfZx #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/imIeYVLIYN
குறிப்பிடத்தக்க வகையில், நாக்பூர் டெஸ்டுக்கான வேகப்பந்து வீச்சாளர்களாக இந்திய அணி சிராஜ் மற்றும் ஷமியை விளையாடும் லெவன் அணியில் சேர்த்துள்ளது. இருவரும் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்தப் போட்டியில் விளையாடும் பதினொன்றில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இடம் அளித்துள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அடங்குவர்.
இந்தியா அணி விவரம்: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணி விவரம்: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், டாட் மர்பி, நாதன் லியான், ஸ்காட் போலண்ட்