IND vs AFG: கடைசி நேரத்தில் முஜீப் உர் ரஹ்மான் காட்டடி.. இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!
இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராகிம் ஜார்தான் களமிறங்கினர். இந்தூர் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரண்டு ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 20 ரன்களாக இருந்தது. போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் விக்கெட்களை விட தொடங்கினர்.
🏏🇮🇳 TIME TO CHASE & SEAL THE SERIES!
— The Bharat Army (@thebharatarmy) January 14, 2024
📷 Getty • #INDvAFG #INDvsAFG #TeamIndia #BharatArmy #COTI🇮🇳 pic.twitter.com/HLbtoGJodR
ரவி பிஷ்னாய் வீசிய 2.2 ஓவரில் ஆப்கானிஸ்தானின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். 8 ரன்கள் எடுத்திருந்த ஜார்தானின் விக்கெட்டை அக்சார் எடுக்க, 6.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்த ஓவர் போட வந்த சிவம் துபே வந்தவுடனேயே அஸ்மத்துல்லா உமர்சாய் க்ளீன் போல்ட் செய்ய, 7 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. மறுமுனையில் நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடிய 28 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குல்பாடின் 57 ரன்கள் எடுத்த நிலையில், அக்சார் பட்டேல் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்சானார். அப்போது ஆப்கானிஸ்தான் அணி 11.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்கள் விழ, 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நஜிபுல்லாவின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வெளியேற்ற, ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நேரத்தில் முஜீப் உர் ரஹ்மான் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் எகிறியது.
KING KOHLI TAKES THE CATCH #ViratKohli l #ViratKohli𓃵 l #INDvAFG l #INDvsAFG pic.twitter.com/OkZcOvdWZA
— 𝐕𝐈𝐑𝐀𝐓𝕏𝐑𝐂𝐁 (@ProfKohli18) January 14, 2024
கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசி 19.5 வது ஓவரில் அஹமது நூரை வெளியேற்ற, கடைசி பந்தில் ஃபசல்ஹக் பாரூக்கி அவுட்டானார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோக ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களும், சிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.