Ind-Pak 2021 WC: அதிகம் பேர் கண்டு களித்த சர்வதேச டி20 மோதல்! ரெக்கார்டு படைத்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்!
அக்டோபர் 24-ம் தேதி நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டியை கிட்டத்தட்ட 16 கோடி பார்வையாளர்கள் டிவியில் பார்த்திருக்கின்றனர்.
2021-ம் ஆண்டு மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றுதான் டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி. அக்டோபர் 24-ம் தேதி நடந்த இந்த போட்டியை கிட்டத்தட்ட 16 கோடி பார்வையாளர்கள் டிவியில் பார்த்திருக்கின்றனர். கிரிக்கெட் வரலாற்றில், அதிக பார்வையாளர்களை கொண்ட சர்வதேச டி20 போட்டியாக இந்த போட்டி சாதனைப் படைத்திருக்கிறது.
முன்னதாக, 2016 டி20 உலகக்கோப்பையின்போது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியைவிட அதிக பார்வையாளர்கள் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை கண்டிருப்பதாக ரெக்கார்டுகள் தெரிவிக்கின்றது.
Ind-Pak 2021 WC clash becomes most viewed T20I match: ICC
— ANI Digital (@ani_digital) November 25, 2021
Read @ANI Story | https://t.co/Gp4lLFweAt#INDvPAK pic.twitter.com/AJw0bWz1ZF
மேட்ச் ரீவைண்ட்:
துபாய் மைதானத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா ஷாகின்ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரிலே எல்.பி.டபுள்யூ ஆனார். மூன்றாவது ஓவரில் கே.எல்.ராகுலும் ஷாகின்ஷா பந்தில் போல்டானார். இதனால், இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை அடுத்து, 20 ஓவர்களில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் பவுண்டரி, சிக்ஸரை முதல் ஓவரிலே அடித்தார். பாகிஸ்தான் அணி பவர்ப்ளே முடிவில் 43 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானும், பாபர் அசாம் இணையை பிரிக்க விராட்கோலி இந்திய பந்துவீச்சாளர்களை மாறி, மாறி பயன்படுத்தினர். 10 ஓவர்கில் பாகிஸ்தான் அணி 71 ரன்களை எட்டியது.
சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 40 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் முகமது ரிஸ்வானும் 41 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அரைசதம் கடந்தார். கடைசியில், பாகிஸ்தான் வெற்றிக்கு 15 பந்தில் 3 ரன்களே தேவைப்பட்டது. பாகிஸ்தான் அணி முகமது ஷமியின் ஓவரிலே வெற்றி பெற்றது. இதன்மூலம் உலககோப்பை வரலாற்றில் இந்தியாவை வென்றதே இல்லை என்ற கரும்புள்ளிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது. கேப்டன் பாபர் அசாம் 52 பந்தில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 ரன்களுடனும், ரிஸ்வான் 55 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போட்டியாக இது அமைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்