குயிலப்பிடிச்சு கூண்டில் அடைச்சு.. கூண்டுக்குள் ரசிகர்கள்.. ட்ரெண்டாகும் அபுதாபி மைதானம்!
பரப்பரபாக நடைபெற்ற ஆஸ்திரேலிய-தென்னாப்பிரிக்கா சூப்பர் 12 போட்டியில் மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்திருந்த கூண்டு வைரலாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பையில் இன்று முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளான இன்று ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியானா ஆஸ்திரேலிய-தென்னாப்பிரிக்கா போட்டி மிகவும் விறு விறுப்பாக அமைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து இருந்த கூண்டு மிகவும் வைரலாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மைதானத்தில் ஒரு பகுதியில் குடும்பம் குடும்பமாக கூண்டாக இடைவெளி விட்டு அமரும் வகையில் சில வெள்ளை நிற கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கூண்டுகளை பார்க்கும் போது நம்முடைய தியேட்டரில் கப்பில்ஸ் சீட் நினைவுக்கு வந்தது.
Obsessed with the seating enclosures at the T20 World Cup #AUSvSA pic.twitter.com/IE8xyqkAI9
— Roushan Alam (@roushanalam) October 23, 2021
இந்த கூண்டு தொடர்பாக பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு சிறப்பான சமூக இடைவெளி அமைப்பு என்று பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Socially distanced fan arrangements in Abu Dhabi #T20WorldCup #AUSvSA pic.twitter.com/M7bHMRoRH8
— Saj Sadiq (@SajSadiqCricket) October 23, 2021
Modern problems required modern solutions #T20WorldCup2021 #AUSvSA pic.twitter.com/wGn5rTtNeL
— Shaziyaa Mehmood (@ShaziyaaMehmood) October 23, 2021
Which one is better?#AUSvSA pic.twitter.com/lEMzUws9DI
— Kamran (@Themardanwala) October 23, 2021
The "new normal"🙃 #AUSvSA pic.twitter.com/IpsHrAeQAT
— Nkabi (@nkabiyam) October 23, 2021
Anyone played farmville as kids? #AUSvSA pic.twitter.com/ivzJgsMDV4
— CA Mayank (@Mayank_Parakh) October 23, 2021
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் அதை பாராட்டியும் மற்றொரு சிலர் அதை கேலி செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:பரபரப்பான கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி - தென்னாப்பிரிக்காவின் போராட்டம் வீண்!