Virat Kohli: 20 நிமிடங்கள் போதும்.. விராட் கோலியை நான் மீட்டெடுப்பேன்: சுனில் கவாஸ்கரின் சூப்பர் ஸ்பீச்!
விராட் கோலியுடன் செலவிட 20 நிமிடங்கள் கிடைத்தால் போதும் அவரை பழைய ஃபார்முக்கு நிச்சயம் கொண்டுவந்து விடுவேன் என்று கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
விராட் கோலியுடன் செலவிட 20 நிமிடங்கள் கிடைத்தால் போதும் அவரை பழைய ஃபார்முக்கு நிச்சயம் கொண்டுவந்து விடுவேன் என்று கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
விராட் கோலி.. பேரைச் சொன்னாலே சும்மா அதிரும்ல என்ற அளவிலான கிரிக்கெட் வீரர். ஆனால் சமீப காலமாக அவர் ஃபார்மில் இல்லை என்ற விமர்சனங்கள் விளையாட்டுலகில் மலிந்து கிடக்கின்றன.
இந்நிலையில் தான் அண்மையில் "இதுவும் கடந்து போகும். நம்பிக்கையுடன் இருங்கள் கோலி" என ட்வீட் செய்திருந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கோலி 16 ரன்கள் மட்டுமே திணறித் திணறி எடுத்த நிலையில் அவர் இந்த ட்வீட்டை பகிர்ந்திருந்தார். அதற்கு கோலியும் பதில் கூறியிருந்தார். அதில், "நன்றி. தொடர்ந்து மிளுருங்கள், வளருங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்து" என்று கூறியிருந்தார்.
பாபர் அசாமைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், "கடந்த காலங்களில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ரன் குவிப்பதை அனுபவித்த வீரர். இப்போது அவருக்கு சிறந்த ஓய்வு கிடைத்துள்ளது. நிச்சயம் இதன் மூலம் தன்னை ரீசார்ஜ் செய்து கொண்டு, அவர் கம்பேக் கொடுப்பார். மீண்டும் சிறப்பாக களத்தில் அவர் செயல்படுவார் என நம்புகிறேன். அவரைப் போன்ற திறமையான வீரரை ஒருபோதும் தவிர்க்க முடியாது" என்று கூறினார்.
View this post on Instagram
இப்படி ஆளுக்கொரு கருத்து சொல்ல களத்தில் கடைசியாக குதித்தவர் நம் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
ஒரு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், "எனக்கு கோலியுடன் செலவிட வெறும் 20 நிமிடங்கள் கிடைத்தால் போதும். நான் அவர் என்ன செய்ய வேண்டும். இந்த நெருக்கடியான நிலையில் எது அவருக்கு உதவும் என்பவனவற்றையெல்லாம் தெளிவாக சொல்லிவிடுவேன். என்னுடைய அறிவுரைகள் ஆலோசனைகள் மட்டும்தான் அவருக்கு உதவும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆஃப் ஸ்டம்ப் லைனில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு என் ஆலோசனைகள் தீர்வு கொடுக்கும். அண்மைக்காலமாக ரன் குவிக்காதது நிச்சயமாக அவருக்கு நெருக்கடியை கொடுத்திருக்கலாம். அவரை இன்னும் ரசிகர்கள் ரன் மெஷினாகப் பார்க்கலாம்.
நான் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்துள்ளேன். இதே ஆஃப் சைட் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன். ஆகையால் என்னால் அவருக்கு சிறந்த அனுபவங்களைப் பகிர முடியும். எல்லா கிரிக்கெட் வீரருக்கும், அனைத்து பந்துகளையும் அடித்து ரன் எடுக்க வேண்டும் என ஆர்வமும் இக்கட்டும் இருக்கும். ஆனால் களத்தில் எத்தனை பந்துகள் வந்தாலும் சரி, மிகச் சரியான பந்துகளை கணித்து எதிர்கொண்டு விளையாட வேண்டும். அந்த வகையில் கோலியின் சறுக்கல் இங்கிலாந்து தொடரில் தெரிந்தது" என்று கூறியுள்ளார்.
பட்லரின் ஆதரவுப் பேச்சு: பாபர் அசாம், தினேஷ் கார்த்திக் வரிசையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பட்லரும் விராத் கோலிக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பட்லர் "கோலி கிரிக்கெட் உலகின் மகத்தான வீரர்களில் ஒருவர். அவர் பல ஆண்டுகளாக அயராது ரன் சேர்த்தவர். இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்தவர். அவர் ஒரு க்ளாஸான வீரர். அவருக்காக அவரது சாதனைகள் பேசும். மற்றபடி இந்த ஃபார்ம்-அவுட் எல்லாம் குறுகிய காலம் பிரச்சனைகள் தான்" எனக் கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.