மேலும் அறிய

ICC World Cup Time Table: 27ஆம் தேதி உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு - ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியாவில் நடக்கவுள்ள 13வது உலக்கோப்பைக்கான அட்டவணை வரும் 27ஆம் தேதி காலை 11.30  மணியளவில் வெளியிடப்படும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் நடக்கவுள்ள 13வது உலக்கோப்பைக்கான அட்டவணை வரும் 27ஆம் தேதி காலை 11.30  மணியளவில் வெளியிடப்படும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மும்பையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. 

13வது உலகக்கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வரும் செவ்வாய் கிழமை அதாவது ஜூன் 27ஆம் தேதி அட்டவணை வெளியிடப்படவுள்ளது என ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பின் போது இந்தியாவில் உள்ள எந்தெந்த மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என தெரியவரும். மேலும் முதல் போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்தும் அந்த அட்டவணையில் தெரியவரும். 

ஏற்கனவே இந்த உலகக்கோப்பை போட்டிகள் குறித்து பாகிஸ்தான் அணி ஏற்கனவே “ நாங்கள் குஜராத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் விளையாட விரும்பவில்லை எனவும், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நாங்கள் பாதுகாப்பாக விளையாட முடியும் எனவும் கூறியிருந்தனர். 

2011 ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியானது இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு வங்கதேசம் மற்றும் இலங்கையுடன் இணைந்து இருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. ஆனால், இம்முறை ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா மட்டுமே தனியாக நடத்துகிறது. 

ஏற்கனவே உலகக்கோப்பைக்கான வரைவு அட்டவணை கசிந்தது. வரைவு அட்டவணையின்படி, உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த வரைவு அட்டவணை அனைத்து நாடுகளுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிடும். அதன்படி, உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்த இரண்டு அணிகளும்தான் மோதியது. 

அக்டோபர் 15ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் மோத இருப்பதாகவும், இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிகிறது. இந்தாண்டு முதன்முறையாக உலகக் கோப்பை போட்டிகள் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 29ம் தேதி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த மைதானத்தில் நடைபெறலாம். உலகக் கோப்பைக்காக ஏகானா மைதானத்தில் புதிய பிட்ச் உருவாக்கப்பட்டது. கான்பூருக்கு பிறகு, உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ இரண்டாவது நகரமாக இருக்கும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசு மரியாதையுடன் நடந்து வரும் ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
அரசு மரியாதையுடன் நடந்து வரும் ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
Rafael Nadal: ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
Rafael Nadal: ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ratan Tata Untold love story  | ரத்தன் டாட்டா BREAK UP 💔 கடைசி வரை BACHELOR!Ratan Tata Passed away | RIP ரத்தன் டாடாஉடலுக்கு இறுதி அஞ்சலி! கண்ணீர் மழையில் மக்கள்History of Ratan Rata | Mukesh Ambani on Ratan Tata | ”உயிர் நண்பனை இழந்துட்டேன்” என்னால் தாங்க முடியவில்லை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு மரியாதையுடன் நடந்து வரும் ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
அரசு மரியாதையுடன் நடந்து வரும் ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
Rafael Nadal: ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
Rafael Nadal: ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
H Raja speech:  கொலைகாரங்க சார் இந்த சர்க்கார்... கொந்தளித்த ஹெச்.ராஜா
கொலைகாரங்க சார் இந்த சர்க்கார்... கொந்தளித்த ஹெச்.ராஜா
தமிழகத்திற்கு ரூ 7,268 கோடி.. உபிக்கு எப்போவும் போல் ஜாக்பாட்தான்.. வரி பகிர்வை விடுவித்த மத்திய அரசு!
தமிழகத்திற்கு ரூ 7,268 கோடி.. உபிக்கு எப்போவும் போல் ஜாக்பாட்தான்.. வரி பகிர்வை விடுவித்த மத்திய அரசு!
அயன் பட பாணியில் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
அயன் பட பாணியில் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Murasoli Selvam: முரசொலி செல்வம் திடீர் மறைவு : ”கொள்கைச் செல்வம் மறைந்தாரே” முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்
முரசொலி செல்வம் திடீர் மறைவு : ”கொள்கைச் செல்வம் மறைந்தாரே” முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்
Embed widget