மேலும் அறிய

Afghanistan Semi Final Chances: ஆப்கானிஸ்தான் இதை மட்டும் செய்தால் போதும்.. அரையிறுதிக்கு செல்ல இன்னும் இருக்கிறது வாய்ப்பு..!

மூன்று முன்னாள் உலகக் கோப்பை சாம்பியன்களை ஒன்றன் பின் ஒன்றாக தோற்கடித்து அரையிறுதிக்கான பந்தயத்தில் ஆப்கானிஸ்தான் அணி இன்னும் இருக்கிறது.

உலகக் கோப்பை 2023ல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூன்று முன்னாள் உலகக் கோப்பை சாம்பியன்களை ஒன்றன் பின் ஒன்றாக தோற்கடித்து அரையிறுதிக்கான பந்தயத்தில் ஆப்கானிஸ்தான் அணி இன்னும் இருக்கிறது. முதலில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிப் பயணத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, பின்னர் 1992ல் வெற்றி பெற்ற பாகிஸ்தானையும், பின்னர் 1996ம் ஆண்டு வெற்றிபெற்ற இலங்கையும் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தது. 

இப்போது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி புதிய சாதனை படைக்கும் கனவில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. இந்த நேரத்தில், ஆப்கானிஸ்தான் எப்படி இங்கிருந்து அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கேள்வி ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் உள்ளது. உங்கள் மனதில் இதே கேள்வி இருந்தால், அதற்கான பதில் உங்களுக்காக இதோ!

ஆப்கானிஸ்தான் அணி எப்படி அரையிறுதிக்கு தகுதிபெற முடியும்..?

உலகக் கோப்பை 2023ல் ஆப்கானிஸ்தான் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டியது அவசியம். ஆப்கானிஸ்தான் அணி அடுத்ததாக நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாட இருக்கிறது.

  • ஆப்கானிஸ்தான் அணி தனது மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளைப் பெறும். அதன் பிறகு ஆஸ்திரேலியா ஏதேனும் ஒரு போட்டியில் தோற்று 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் அதிகபட்சமாக 12 புள்ளிகளை எட்ட முடியும். இதுபோன்ற சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானின் நிகர ரன் ரேட் மேம்பட்டால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
  • ஆப்கானிஸ்தான் அணி மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து அணிகள் எஞ்சிய மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தால், ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறலாம்.
  • ஆப்கானிஸ்தான் தனது மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். இதன் மூலம் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 2 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லலாம்.
  • எஞ்சியிருக்கும் மூன்று ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பெரிய வித்தியாசத்தில் தோற்றால், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
  • ஆப்கானிஸ்தான் இரண்டு போட்டிகளில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து குறைந்தபட்சம் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தால், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு வரலாம்.
  • ஆப்கானிஸ்தான் அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றால், இலங்கை மற்றும் பாகிஸ்தானின் தோல்விக்கு ஆசைப்பட வேண்டும், அப்போதுதான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வழியில் ஏதேனும் ஒன்றை சரியாக செய்தால் இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு வரலாம். உலகக் கோப்பையில், ஒரு அணி அரையிறுதிக்கு வருவதற்கு அதிக வழிகள் உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் பல அணிகள் இதுபோல் தகுதிபெற்றுள்ளன. தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கும் இதேபோன்ற ஒரு வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு வருவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது, மீதமுள்ள மூன்று போட்டிகளில் அந்த அணி இன்னும் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget