மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

T20 World Cup 2022 AUS vs NZ: பேட்டிங்கில் அடித்து நொறுக்கிய நியூசிலாந்து..! இமாலய இலக்கை எட்டிப்பிடிக்குமா ஆஸ்திரேலியா..?

உலககோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 200 ரன்களை விளாசியுள்ளது.

சூப்பர் 12 குரூப் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. 120 பந்துகளில் 201 ரன்கள் இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 குரூப் 1 சுற்றில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன், டிவோன் கான்வே ஆகியோர் களம் புகுந்தனர்.

தொடக்கம் முதலே ஃபின் ஆலன் அதிரடி காட்டத் தொடங்கினார். 16 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 42 ரன்களை விளாசினார். அதிரடி தொடக்கம் கொடுத்த ஃபின் ஆலன், ஹேசில்வுட் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தில் போல்டு ஆனார்.

பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். மறுமுனையில் விக்கெட் கீப்பர் டிவோன் கான்வே அரை சதம் பதிவு செய்தார். வில்லியம்சன் தோள் கொடுக்க கான்வே அதிரடி காண்பித்தார். 13வது ஓவரின் கடைசி பந்தில் ஜம்பா வீசிய பந்தில் எதிர்பாரதவிதமாக எல்பிடபிள்யூ ஆனார் வில்லியம்சன்.

பின்னர் வந்த கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்தபடியாக ஆடம் ஜம்பா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து விக்கெட் கீப்பர் கான்வே 58 பந்துகளில் (2 சிக்சர்கள், 7 பவுண்டரிகள்) 92 ரன்கள் விளாசினார். அவருடன் ஜேம்ஸ் நீஷம் 26 ரன்களுடன் (2 சிக்சர்கள்) களத்தில் இருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழகத்தை கட்டம் கட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மைய அறிக்கை
TN Rain: தமிழகத்தை கட்டம் கட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மைய அறிக்கை
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!
நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழகத்தை கட்டம் கட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மைய அறிக்கை
TN Rain: தமிழகத்தை கட்டம் கட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மைய அறிக்கை
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!
நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
Rasipalan November 24: கும்பத்திற்கு சிலரின் வருகையால் மகிழ்ச்சி; மீனத்திற்கு காலதாமதம்! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 24: கும்பத்திற்கு சிலரின் வருகையால் மகிழ்ச்சி; மீனத்திற்கு காலதாமதம்! உங்கள் ராசிபலன்?
Redmi A4 5G: ரூ. 8,499க்கு 5ஜி, 4 GB RAM மொபைலை அறிமுகம் செய்த ரெட்மி: எப்போது விற்பனைக்கு வரும்?
Redmi A4 5G: ரூ. 8,499க்கு 5ஜி, 4 GB RAM மொபைலை அறிமுகம் செய்த ரெட்மி: எப்போது விற்பனைக்கு வரும்?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Embed widget