மேலும் அறிய

IND vs BANG, Match Highlights:டி20 உலகக்கோப்பை: த்ரில் வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்திய இந்திய அணி...!

ICC T20 WC 2022, IND vs BANG: உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி வங்காளதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து, இந்திய அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி வங்காளதேசத்தை 5 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து,  இந்திய அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இந்தியா-வங்காளதேசம் இடையே அடிலெய்டில் நடைபெற்றுவரும் 35ஆவது ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் விளையாடியது. மழை காரணமாக ஓவர்கள் 16 ஆக குறைக்கப்பட்டது.

இதையடுத்து முதலில் விளையாடிய இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184  ரன்களை எடுத்தது. வங்காளதேசம் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷான்டோ, லிட்டன் தாஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். லிட்டன் தாஸ் அதிவேகமாக 21 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

வங்காளதேசம் 7 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கீடு செய்தது.  இதனால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 78 பந்துகளில் அந்த அணி 119 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. 15 நிமிடங்களுக்கு மேல் மழை காரணமாக ஆட்டம் தடை பட்டது. மழை நின்ற பிறகு, மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது ஓவர்கள் குறைக்கப்பட்டது. 2ஆவது இன்னிங்ஸுக்கு மொத்தம் 16 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது.

9 ஓவர்களுக்கு 85 ரன்கள் இலக்காக வங்காளதேசத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன. மொத்தம் 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது லிட்டன் தாஸ் ரன் அவுட்டானார். அவரை கே.எல்.ராகுல் ரன் அவுட் செய்தார். அதைத் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிய ஷான்டோ 21 ரன்கள்  எடுத்திருந்தபோது முகமது ஷமி வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

ஆஃபிப் ஹுசைன் 3 ரன்களில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆனார். 13 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹார்திக் பாண்டியா. இந்தியாவின் ஃபீல்டிங்கும் சிறப்பானதாக இருந்தது. கடைசி ஓவரில் 1 பந்துக்கு 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது இந்தியா. இந்த ஆட்டம் மெல்போர்னில் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், வங்காளதேசத்திற்கு எதிரான இந்த ஆட்டத்தில் அதிரடி காண்பித்தார்.

4 சிக்சர்களையும், 3 பவுண்டரிகளையும் விளாசிய கே.எல்.ராகுல் 32 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். ஷாகிப் வீசிய பந்தை அடித்தபோது முஸ்தாபிஜூரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். முன்னதாக, கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட் கோலி, சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்களை அடித்தார். அவர் ஷாகிப் பந்துவீச்சில் போல்டு ஆனார்.  இதையடுத்து களமிறங்கிய ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். அக்சர் படேல் 7 ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் சென்றார்.

அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்துமா இந்தியா? அதிர்ச்சி அளிக்குமா வங்காளதேசம்? பாக்கலாமா?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலககோப்பை சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. அரையிறுதிக்கு செல்லப்போவது  யார்? என்ற விறுவிறுப்பு அதிகரித்துள்ளதால் இனி வரும் ஒவ்வொரு போட்டிகளுமே அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக மாறியுள்ளது.

இந்த நிலையில், குரூப் 2 பிரிவில் இன்று அடிலெய்ட் மைதானத்தில் இந்தியாவும், வங்காளதேசமும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்திய அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமான போட்டி ஆகும். 

குரூப் 2 பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி அணி 3வது இடத்தில் உள்ள வங்காளதேச அணியை எதிர்கொண்டது. இந்திய அணியும், வங்காளதேச அணியும் 3 ஆட்டங்களில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி, 1 போட்டியில் தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் சம இடத்தில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இருப்பினும், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்திற்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் போட்டியை வெல்ல கடுமையாக போராடும்.

இந்தியாவும், வங்காளதேசமும் டி20 போட்டிகளில் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 10 முறை இந்தியாவும், 1 முறை வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget