PAK vs AUS, 1 Innings Highlight: ஆஸி.,க்கு 177 ரன்கள் டார்கெட்: கட்டுப்படுத்துமா பாகிஸ்தான்?
4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஸ்வான் அவுட்டாகினார்.அவரை அடுத்து களமிறங்கிய ஆசிஃப் அலி (0), சோயப் மாலிக்கும் (1) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.
டி-20 உலக்கோப்பை தொடரின் அரை இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றது. நேற்று நடந்த முதல் அரை இறுதிப்போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது நியூசிலாந்து. இந்நிலையில், இன்று துபாயில் நடந்த இரண்டாது அரை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு வழக்கம் போல பாபர் அசாமும், ரிஸ்வானும் முதல் பேட்டிங் ஆடினர். 10 ஓவர்கள் வரை களத்தில் நின்ற இந்த இணை 70+ ரன்கள் சேர்த்தது. 10வது ஓவரின்போது ஜம்பா வீசிய பந்தில்தான் கேட்ச் கொடுத்து பாபர் அசாம் அவுட்டாகினார். அவரை அடுத்து ஃபகர் ஜமான் களமிறங்கினார். மீண்டும் ஜோடி சேர்ந்து ஆடியது ரிஸ்வான் - ஜமான் இணை. 18 ஓவர்கள் வரை இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த இணை அணியின் ஸ்கோரை 140+க்கு எடுத்துச் சென்றனர்.
Another sensational knock from Mohammad Rizwan 🔥#T20WorldCup | #PAKvAUS | https://t.co/W7izrV7PAI pic.twitter.com/CW63heIp6t
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஸ்வான் அவுட்டாகினார்.அவரை அடுத்து களமிறங்கிய ஆசிஃப் அலி (0), சோயப் மாலிக்கும் (1) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஆஸ்திரேலியாவை பொருத்தவரை ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளும், கம்மின்ஸ், ஜம்பா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 176 ரன்கள் எடுத்துள்ளது.
🎯 set!
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
Australia will need to chase down 177 for a place in the final.
Big ones galore from the Pakistan batters 💥#T20WorldCup | #PAKvAUS | https://t.co/W7izrV7PAI pic.twitter.com/xmK4sp9iqr
இதுவரை நேருக்கு நேர்:
பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலிய அணியும் இதுவரை டி-20 போட்டிகளில் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற உள்ள துபாய் மைதானத்திலும் பாகிஸ்தானே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் துபாய் மைதானத்தில் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 2 முறை வெற்றி பெற்றுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்