ENG vs NZ, Match Highlights: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு டிக்கெட் வாங்கிய நியூசிலாந்து
167 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து, 19 ஓவர்களில் இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
![ENG vs NZ, Match Highlights: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு டிக்கெட் வாங்கிய நியூசிலாந்து ICC T20 WC 2021: New Zealand won the match by 5 wickets against England Semi-Final match 43 at Sheikh Zayed Stadium ENG vs NZ, Match Highlights: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு டிக்கெட் வாங்கிய நியூசிலாந்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/10/d21205100f677daa26ca665a50ee0bdc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிந்து நாக்-அவுட் சுற்று இன்று தொடங்கி உள்ளது. முதல் அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. அபுதாபியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங் தேர்வு செய்தது. 167 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து, 19 ஓவர்களில் இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
முதலில் பேட்டிங் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 6வது ஓவரில் முதல் விக்கெட்டை இழக்க நேரிட்டது. மில்னே பந்துவீச்சில் ஓப்பனர் பேர்ஸ்டோ அவுட்டாக, டேவிட் மாலன் ஒன் - டவுன் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அவர், 41 ரன்கள் எடுத்தார். 9வது ஓவரில் பட்லர் பெவிலியன் திரும்ப, மொயின் அலி பேட்டிங் களமிறங்கினார். மாலனும், மொயின் அலியும் அதிரடியாக கூட்டணி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடித்த மொயின் அலி, 37 பந்துகளில் 51 ரன்கள் எடுக்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து 166 ரன்கள் எடுத்தது.
167 ரன்கள் இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணிக்கு, மார்டின் குப்தில், டேரில் மிட்சல் ஓப்பனிங் களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரிலேயே குப்தில் ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து பின் தங்க ஆரம்பித்தது. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில்லியம்சனும் ஆட்டமிழக்க, டேவன் கான்வே பேட்டிங் களமிறங்கினார்.
New Zealand are in the final of the #T20WorldCup 2021 🎉#ENGvNZ | https://t.co/zXAsuGVcjZ pic.twitter.com/2PKjPlgTLX
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2021
கான்வே 46 ரன்கள் எடுக்க, டேரில் மிட்சல் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். கடைசியில் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷமும், 11 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோருக்கு பங்காற்ற நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி போட்டியை வென்றது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)