ICC Mens Test Rankings: நம்பர் 1 மகுடத்தை சூடிய இந்தியா..! டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தல்..!
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது. புதிய தரவரிசை பட்டியலின்படி, இந்தியா 121 ரேட்டிங் மற்றும் 3 ஆயிரத்து 31 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், வங்காளதசே அணிக்கு எதிராகவும் நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி முதலிடம் வகிக்கும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 116 ரேட்டிங்குடன் 2வது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் இங்கிலாந்து அணி 114 ரேட்டிங்குடன் உள்ளது.
டெஸ்ட் தரவரிசை முழு விவரம்:
- இந்தியா
- ஆஸ்திரேலியா
- இங்கிலாந்து
- தென்னாப்பிரிக்கா
- நியூசிலாந்து
- பாகிஸ்தான்
- இலங்கை
- வெஸ்ட் இண்டீஸ்
- வங்காளதேசம்
- ஜிம்பாப்வே
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மட்டுமே புள்ளிப்பட்டியலில் 100க்கும் மேற்பட்ட ரேட்டிங்குடன் உள்ளது.
இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நேருக்கு நேர் மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்தபோது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை அவர்களை வீழ்த்தி பார்டர் – கவாஸ்கர் தொடரை தக்கவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணிகளை ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலிலும் இந்திய அணி 267 ரேட்டிங் மற்றும் 13 ஆயிரத்து 889 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி தரவரிசை பட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர்.
ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 76 ரேட்டிங்குகளுடன் 1906 புள்ளிகள் மட்டுமே பெற்று 8வது இடத்தில் உள்ளனர். இலங்கை அணி 84 ரேட்டிங்குடன் 2015 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி 86 ரேட்டிங்குடன் 1902 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க: "ரோஹித் ஃபிட்டாக இல்லையென்றால், கோலியைத்தான் அவர்கள் கேப்டனாக்க வேண்டும்" - WTC குறித்து ரவி சாஸ்திரி!
மேலும் படிக்க: "6 மாதத்திற்கு ஒரே மாதிரியான உணவைக் கூட சாப்பிடுவேன்; சுவை முக்கியமில்லை" - டயட் குறித்து பேசிய கோலி!