NED Vs BAN LIVE Score: நெதர்லாந்திடம் மொத்தமாக சரணடைந்த வங்கதேசம்; 87 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
NED Vs BAN LIVE Score Updates: நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE
Background
உலகக் கோப்பை 2023ல் இன்று இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முந்தைய போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கும்.
கொல்கத்தா ஆடுகளம் எப்படி..?
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனின் ஆடுகளம் மிக அதிக ஸ்கோரை அடிக்க உதவும் பிட்சாகும். இந்த மைதானத்தில், ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது போல் தெரியும். ஆனால் பந்து பழையதாகிவிட்ட பிறகு, பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களை விரட்டுவார்கள். இந்த மைதானத்தின் அவுட்பீல்ட் மிக வேகமாக உள்ளது, இதன் காரணமாக பல முறை பெரிய ஸ்கோர்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சராசரி ஸ்கோர் 404 ரன்கள். அதேசமயம் இந்த ஆடுகளத்தில் 63 ரன்களே மிகச்சிறிய ஸ்கோராகவும் பதிவாகியுள்ளது. எனவே, இங்கு டாஸ் வென்ற அணிகள் முதலில் பந்து வீச விரும்பும்.
கொல்கத்தாவில் வானிலை எப்படி இருக்கும்?
நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். இந்தப் போட்டியில் மழையால் எந்த இடையூறும் ஏற்படாது. வானம் தெளிவாக இருக்கும்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இன்றைய போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், இரு அணிகளும் உலகக் கோப்பை 2023ல் தங்களது இரண்டாவது வெற்றிக்காக போராடும்.
கணிக்கப்பட்ட வங்கதேச அணி:
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது
கணிக்கப்பட்ட நெதர்லாந்து அணி:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்
NED Vs BAN LIVE Score: இந்த போட்டியில் சிக்ஸர் விபரம்..!
இந்த போட்டியில் இரு அணிகள் தரப்பிலும் மொத்தம் 4 சிக்ஸர்களும் இரு அணிகளும் தலா 2 சிக்ஸர்கள் விளாசப்பட்டது.
NED Vs BAN LIVE Score: இந்த போட்டியில் பவுண்டரிகள் விபரம்..!
இந்த போட்டியில் இரு அணிகள் தரப்பிலும் சேர்த்து மொத்தம் 38 பவுண்டரிகள் விளாசப்பட்டது. இதில் நெதர்லாந்து அணி 22 பவுண்டரிகளும் வங்கதேசம் அணி 16 பவுண்டரிகளும் விளாசியது.
NED Vs BAN LIVE Score: புள்ளிப்பட்டியலில் நெதர்லாந்து முன்னேற்றம்..!
நெதர்லாந்து அணி வங்கதேசத்தினை வீழ்த்தியதால் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
NED Vs BAN LIVE Score: ஆட்டநாயகன்
இந்த போட்டியில் நெதர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பவ்ல் வென் மீக்கீரீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
NED Vs BAN LIVE Score: நெதர்லாந்திடம் மொத்தமாக சரணடைந்த வங்கதேசம்; 87 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
வங்கதேச அணி 42.2 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.