ICC Apology : நம்பர் 1 சர்ச்சை விவகாரம்: தொழில்நுட்ப பிழையே இதற்கு காரணம்.. இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட ஐசிசி..!
ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசையில் இந்தியா நம்பர் 1 அணியாக தேர்வு செய்ததற்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசையில் இந்தியா நம்பர் 1 அணியாக தேர்வு செய்ததற்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொழில்நுட்ப பிழை காரணமாக, சிசி இணையதளத்தில் இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணியாக தவறாகக் காட்டப்பட்டது என்பதை ஐசிசி ஒப்புக்கொள்கிறது. இந்த சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ”என்று தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஜிம்பாப்வேயின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, புதிய அப்டேட்டை வெளியிட்டது. அதில், ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் போட்டியிடுகின்றன. இது நடந்து கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியில் இரு அணிகளுக்கும் கடைசி தொடராகும்.
சிறிது நேரம் மட்டுமே முதலிடத்தில் இருந்த இந்திய அணி:
ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா சிலமணி நேரங்கள் மட்டுமே முதலிடத்தில் இருந்தது. நாக்பூர் டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியாவை முந்தி முதலிடம் பிடித்த இந்திய அணி மீண்டும் நேற்று இரவே 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி நேற்று காலை டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. அப்போது இந்தியா 115 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 111 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தது. மீண்டும் நேற்று இரவு ஐசிசி அப்டேட்டை வெளியிட்டது. அதில், ஆஸ்திரேலிய அணி 126 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்திய அணி 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சென்றது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஐசிசியின் நேற்று வெளியிட்ட பெரிய தவறால், இந்திய அணி ஒரே நேரத்தில் மூன்று வடிவங்களிலும் முதலிடத்தை எட்டி, மீண்டும் சில மணிநேரங்களிலேயே பின்னுக்கு சென்றது. இதற்கு முன்பு 2014-ல் தென்னாப்பிரிக்க அணி ஒரே நேரத்தில் மூன்று வடிவங்களிலும் முதல் இடத்தில் இருந்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஐசிசி மீது கடும் எதிர்ப்புகள் வெளிபடுத்தி வந்தனர்.