ICC Playing Conditions: இனிமே இதுக்கு நிரந்தர தடை.. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்.. கண்டிஷன்களை அடுக்கிய ஐசிசி!
பந்தை பாலிஷ் செய்ய எச்சில் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது.
பந்தை பாலிஷ் செய்ய எச்சில் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் பந்தில் எச்சில் வைத்து பாலிஸ் செய்வது தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வருகிற அக்டோபர் 1 ம் தேதி முதல் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர ஐசிசி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி சேர்மன் சவ்ரவ் கங்குலி தெரிவிக்கையில், "ஐ.சி.சி கிரிக்கெட் கமிட்டியின் எனது முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்குவது ஒரு கவுரவம். முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்ட குழு உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பில் நான் மகிழ்ச்சியடைந்தேன். அனைத்து உறுப்பினர்களின் மதிப்புமிக்க உள்ளீடு மற்றும் பரிந்துரைகளுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்:
- ஒரு புதிய பேட்ஸ்மேன் உள்ளே வரும்போது, அது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி என எதுவாக இருந்தாலும் இரண்டு நிமிடங்களுக்குள் ஸ்ட்ரைக் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் T20Iகளில் தொண்ணூறு வினாடிகள் என்ற தற்போதைய வரம்பு மாறாமல் உள்ளது.
- ஒரு பேட்ஸ்மேன் கேட்ச் முறையில் அவுட் ஆனதும், கேட்ச் எடுக்கப்படுவதற்கு முன்பு எதிரில் உள்ள பேட்ஸ்மேன் கிராஸ் செய்ததா என்பதைப் பொருட்படுத்தாமல், புதிய பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் செய்ய வேண்டும்.
- கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் பந்தில் எச்சில் வைத்து பாலிஸ் செய்வது தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நிரந்தரமாக்குவது பொருத்தமானதாக இருக்கும் என ஐசிசி முடிவு செய்துள்ளது.
- பந்துவீச்சாளர் பந்துவீச்சும் நான் - ஸ்ட்ரைக் பேட்ஸ்மேன் பேட் அல்லது அவரது ஏதாவது ஒரு பகுதி கீரிஸுக்குள் இருக்க வேண்டும். அதையும் மீறி வெளியேறினால் நடுவர் டெட் என அறிவார். அதேபோல், பந்துவீச்சாளர் கோட்டை தாண்டி வீசினாலும் அதுவும் நோ பால் என்று அழைக்கப்படும்.
- பந்து வீச்சாளர் பந்துவீசுவதற்கு ஓடிக்கொண்டிருக்கும் போது பேட்ஸ்மேன் கவனத்தை திசை திருப்ப பீல்டிங் அணி ஏதாவது ஒரு மாற்றம் செய்தால், நடுவர் பேட்டிங் அணிக்கு ஐந்து பெனால்டி ரன்களுடன் டெட் பந்து என்று வழங்கலாம்.
- ரன் அவுட்டை 'அன்ஃபேர் ப்ளே' பிரிவில் இருந்து 'ரன் அவுட்' பிரிவுக்கு மாற்றும் இந்த முறையை விளையாடும் நிபந்தனைகள் சட்டங்களைப் பின்பற்றுகின்றன.
- ஒரு பந்து வீச்சாளர் தான் பந்துவீசும்போது பேட்ஸ்மேன் கீர்ஸ் தாண்டி வெளியேறும்போது ரன் அவுட் செய்ய பந்தை வீசலாம். ஆனால் அந்த பந்து டெட் பால் என்றே வழங்கப்படும்.
-
கடந்த ஜனவரி 2022 ம் முதல் பீல்டிங் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஓவர்களுக்கு பீல்டிங் வட்டத்திற்குள் கூடுதல் பீல்டரைக் கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், 2023 இல் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் முடிந்த பிறகு ஒருநாள் போட்டிகளிலும் இந்த முறை கொண்டுவரப்பட இருக்கிறது.