ICC Ranking : டி20 போட்டிகளில் தொடர்ந்து நம்பர் 1...! கம்பீரம் காட்டும் இந்தியா..!
சர்வதேச அளவில் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் கம்பீரமாக அசத்தி வருகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது ஆசிய கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற இயலாவிட்டாலும், இந்திய அணி டி20 போட்டிகளில் தனது நம்பர் 1 என்ற மகுடத்தை தொடர்ந்து சூட்டி வருகிறது.
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டி20 போட்டிகளுக்கான அணிகள் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி 268 ரேட்டிங்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளது. 49 போட்டிகளில் இந்திய அணி 13 ஆயிரத்து 136 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. அந்த அணி 262 ரேட்டிங்சைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியும், நான்காவது இடத்தில் தென்னாப்பிரிக்கா அணியும், 5வது இடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளது.
There's a new #1 team in the @MRFWorldwide ICC Men's ODI Team Rankings.
— ICC (@ICC) September 9, 2022
Latest changes ⬇️ https://t.co/JRy5I0XpFR
ஆஸ்திரேலியா அணி 6வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 7வது இடத்திலும், இலங்கை அணி 8வது இடத்திலும், வங்காளதேசம் அணி 9வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 10வது இடத்திலும் உள்ளது.
அதேபோல, ஒருநாள் போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசைப்பட்டியலை நேற்று ஐ.சி.சி. வெளியிட்டது. இதன்படி, முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இங்கிலாந்து அணி 119 ரேட்டிங்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளது. 3 ஆயிரத்து 226 புள்ளிகள் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 117 ரேட்டிங்ஸ்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா 111 ரேட்டிங்ஸ்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில் பாகிஸ்தானும், 5வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளது.
6வது இடத்தில் தென்னாப்பிரிக்காவும், 7வது இடத்தில் வங்காளதேசமும், 8வது இடத்தில் இலங்கையும், 9வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 10வது இடத்தில் ஆப்கானிஸ்தானும் உள்ளது. வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல், டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசைப் பட்டியல்கள் ஏதும் புதியதாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்களுக்கன ர
மேலும் படிக்க : Asia Cup : ஆசிய கோப்பை 2022 : மைதானத்தில் சண்டை..! ஆசிப் அலி, பரீத் அகமதுவுக்கு அபராதம்..! என்ன ஆச்சு?
மேலும் படிக்க : Virat Kohli Century: 'நாம் மீள்வோம்.. நல்ல நிலைக்கு வருவோம்' - பாசிட்டிவ் வைபாக ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கோலி!