IPL: பணம் சம்பாதிப்பதற்கு சிறந்த வழி; ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னுரிமை: ஆஸ்திரேலிய வீரர் ஓபன் டாக்!
ஐபிஎல் போன்ற நல்ல லீக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டிம் பெயின் கூறியுள்ளார்.
இந்தியன் ப்ரீமியர் லீக்:
லீக் போட்டிகளில் உலக அளவில் மிகவும் பிரபலமானது இந்தியன் ப்ரீமியர் லீக். இதுவரை 17 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இதில் உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதோடு இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவைத்தொடர்ந்து இது போன்ற லீக் போட்டிகளை வெளி நாடுகளும் நடத்தி வருகிறது. ஆனால், ஐபிஎல் போட்டிகளை போல் அவை எல்லாம் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை.
ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்:
இச்சூழலில் தான் ஐபிஎல் போன்ற நல்ல லீக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டிம் பெயின் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான டிம் பெயின் மற்றும் ஷாம் மார்ஸ் ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர். அதில்,"உனக்கு தெரியும். எனக்கு அது பிடிக்கும். வீரர்கள் பணம் சம்பாதிப்பதற்கு அது ஒரு சிறந்த வழி. மற்ற லீக் போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். ஐசிசி ஐபிஎல் போட்டிகளை வரிசைப்படுத்தும் முக்கியமான போட்டிகளாக மாற்றலாம்.
நான் நினைக்கிறேன், ஐசிசி அவர்கள் உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாதுகாக்கும் வரை, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் மனதிலும் அது முன்னணியில் இருக்க வேண்டும், டெஸ்ட் கிரிக்கெட் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.
ஆனால் வீரர்களுக்கு இப்போது விருப்பங்கள் உள்ளன மற்றும் அவற்றில் நிறைய உள்ளன என்பதை நான் விரும்புகிறேன். நான் முதன்முதலில் விளையாடத் தொடங்கியபோது, டி20 கிரிக்கெட் இல்லை, நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றால் நிறைய கிரிக்கெட் இல்லை. எனவே வீரர்களுக்கு இப்போது விருப்பங்கள் இருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது"என்று கூறினார்.
மேலும் படிக்க: Gautam Gambhir: பயிற்சியாளர் ஆனதும் கம்பீர் வீரர்களுக்கு வைத்த முதல் வேண்டுகோள் - என்ன?
மேலும் படிக்க: TNPL : டிஎன்பிஎல் போட்டியில் திருப்பூர் அணிக்கு கேப்டனான சாய் கிஷோர் ; தோல்வியில் இருந்து மீளுமா?