Sourav Ganguly: விளையாட்டில் அரசியலை கலக்காதீர்; கங்குலி எங்கள் கட்சி இல்லை - பிரதமருக்கு மம்தா வேண்டுகோள்!
Sourav Ganguly : பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலியை ஐசிசி தலைவருக்கான தேர்தலில் போட்டியிட பிரதமர் அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sourav Ganguly : பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலியை ஐசிசி தலைவருக்கான தேர்தலில் போட்டியிட பிரதமர் அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் சவுரவ் கங்குலி மிகவும் சிறந்த வீரர் மட்டும் இல்லாமல், பிரபலமானவரும் தான். ஐசிசி தலைவருக்கான தேர்தலில் சவுரவ் கங்குலியை போட்டியிட பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும். விளையாட்டில் நாம் அரசியலை கலக்க கூடாது. அதேநேரத்தில் கங்குலி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட சவுரவ் கங்குலி பதவி பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மம்தா பானர்ஜி, அவரை ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தேர்தலில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சவுரவ் கங்குலி "நியாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டுள்ளார்" என்று வங்காள முதல்வர் கூறினார். "அவர் பிசிசிஐ தலைவர் பதவியில் நீக்கப்பட்டார். அவர் என்ன தவறு செய்தார்? நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். அவர் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். சவுரவ் கங்குலி மிகவும் பிரபலமான கிரிக்கெட் ஆளுமை. அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அவர் நாட்டிற்காக அதிக சாதனைகளை செய்துள்ளார். அவர் வங்காளத்தின் பெருமை மட்டுமில்லை, இந்தியாவின் பெருமையும் தான். அவர் ஏன் நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டார்,'' என்று கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "பிரதமருக்கு எனது பணிவான வணக்கங்கள். ஐசிசி தேர்தலில் போட்டியிட சவுரவ் கங்குலி அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்." ஐசிசி தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் அக்டோபர் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும். பிசிசிஐ அல்லது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்து வெளியேறும் சவுரவ் கங்குலிக்கு பிறகு ரோஜர் பின்னி பதவியேற்க வாய்ப்புள்ளது.
I request PM to make sure Sourav Ganguly must be allowed to contest ICC election. He's a popular figure which is why he is being deprived. Request GoI not to take a decision politically, but for cricket, sports...He is not a political party member: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/mXmqWrX2rM
— ANI (@ANI) October 17, 2022
சவுரவ் கங்குலி வெளியேற்றப்பட்டாலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக நீடிக்கிறார். "கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோருக்கு இரண்டாவது முறையாக பதவியில் தொடர நீதிமன்றம் வழிவகுத்தது. ஆனால், கங்குலி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அமித் ஷாவின் மகன் மட்டும் அதே பதவியில் நீடிக்கிறார். அது ஏன் என்று தெரியவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் ஜெய் ஷாவுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை, ஆனால் கங்குலி ஏன் நீக்கப்பட்டார்" என்று மம்தா பானர்ஜி கூறினார். "அரசாங்கத்தை பழிவாங்கும் நோக்கிலோ அல்லது அரசியல் ரீதியாகவோ கங்குலி விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கிரிக்கெட்டுக்காக, விளையாட்டுக்காக ஒரு முடிவை பிரதமர் எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.