சொல்லுங்க எங்கே கூட்டம்? என்ன நடக்குது இங்க? டி20 பார்க்க வராத ரசிகர்கள்; கடுப்பான வாசிம் அக்ரம்!
கராச்சி மைதானத்தில் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டி 20 போட்டியில் 5 சதவீத டிக்கெட் விற்பனையானது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் 3 ம் தேதி இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்பொழுது எதிர்பாராத விதமாக இலங்கை அணி சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த அதிரடி தாக்குதலில் இலங்கை அணியின் அப்போதைய கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே, துணை கேப்டன் சங்கக்காரா உள்பட 6 வீரர்கள் காயமடைந்தார். மேலும், ஆறு பாகிஸ்தானிய போலீசார் மற்றும் இரண்டு பொதுமக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, பாகிஸ்தானில் எந்தவொரு போட்டியும் நடந்த அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமே தனது சர்வதேச போட்டிகளை நடத்தி வந்தது. அதன்பிறகு பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானில் போட்டிகளை நடந்த அனுமதி வாங்கி இருந்தது.
இந்தநிலையில் தான் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த ஆண்டில் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணம் கருதி அந்த தொடரையும் அவர்கள் ரத்து செய்தனர். இந்த ரத்தானது மிக பெரிய சர்ச்சையாகவும் வெடித்தது. பல்வேறு முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
நிக்கோலஸ் பூரன் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தநிலையில், நேற்று முன் தினம் இரு அணிகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது அந்த மைதானத்தில் வெறும் 5 சதவீத மட்டுமே டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பாதுகாப்பு பார்க்கப்படுகிறது.
Incredibly sad to see an empty stadium in Karachi for the #PAKvWIt20 especially after the performance of Pakistan Team in the last month. I’m pretty sure I know why but I want to hear from you! Tell me, where is the crowd and why??
— Wasim Akram (@wasimakramlive) December 14, 2021
இந்தநிலையில், குறைந்த அளவே டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், #PAKvWIt20 போட்டிக்கானகராச்சி மைதானத்தில் காலியாக உள்ளதை பார்ப்பது நம்பமுடியாதவையாகவும், வருத்தமாக இருக்கிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருந்தும் ஏன் என்று எனக்குத் தெரியும், ஆனால் உங்களிடமிருந்து இருந்து இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை! சொல்லுங்க எங்க கூட்டம் ஏன் ?? என்று பாகிஸ்தான் ரசிகர்களிடம் கேள்வியை முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டிற்கு வந்து விளையாடுவதற்கு பல்வேறு நாடுகள் தவிர்த்து வரும் நிலையில், போட்டிகளை பார்க்க அந்நாட்டு ரசிகர்களே தற்போது தவிர்ப்பது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் நாட்டில் வருகின்ற 2015 ம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடர் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்